Published On: Sunday, August 23, 2015
அம்பாறை மாவட்ட வெற்றியாளர்களை வாழ்த்தும் உதுமாங்கண்டு நாபீர்
பாராளமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நாள்முதல் அம்பாறை மாவட்டத்தில் ஏற்படப்போகும் அரசியல் ரீதியான முடிவுகளை மிகத்துல்லியமாக மக்களுக்கு விளக்கி வந்த பொறியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தற்போது வெற்றியடைந்துள்ள பைசால் ஹரீஸ் மற்றும் மன்சூருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.
பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் பொறியலாளர் உதுமாங்கண்டு நாபீர் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி தேர்தலை முகம்கொடுக்க வேண்டும் என்ற தன்னுடைய அபிமானிகளின் வேண்டுகோளையும் தாண்டி இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட பைசால் ஹரீஸ் மற்றும் மன்சூர் போன்றவர்களை நேரடியாகவே ஆதரித்து தனது கருத்துக்களை வெளியிட்டு வந்ததுடன் அவரது ஆதரவாளர்களை களத்தில் இறக்கியும் செயற்பட்டார்.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரசுக்கு சமாந்திரமாக அரசியல் செய்ய சரியான கட்சியோ வேட்பாளர்களோ போட்டியிட்டுருக்க வில்லை என்றும் சம்மாந்துறையை பொறுத்தமட்டில் தான் போட்டியிட்டிருந்தால் இஸ்மாயிலினால் ஆயிரம் வாக்கைத் தானும் பெற்றிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
வெற்றியீட்டியவர்கள் கட்சி பேதங்களை மறந்து பிராந்தியத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் அபிலாசைகளை அடைவதற்கும் விரைந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நாபீர் எதிர்காலத்தில் தானும் தன்னால் முடிந்த அனைத்தையும் இம்மக்களுக்காக செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
-எம்.வை.அமீர்-