Published On: Monday, August 24, 2015
மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஹிஸ்புல்லா போன்றோருக்கு தேசியப்பட்டியல் வழங்கியது நல்லாட்சிக்கு ஆபத்தானது-முதலமைச்சர்
நடைபெற்று முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வுக்கு தேசியப்பட்டியல் வழங்கியிருப்பது நல்லாட்சிக்கு முரனானது என்று தெரிவித்தார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்.
காத்தான்குடியில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பில் அங்கு நேரடியாகப் பார்வையிடச் சென்ற முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்:
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:
இலங்கையில் நல்லாட்சி மலர்ந்திருக்கும் இவ்வேளையில் நல்லாட்சியை விரும்பி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் மோசடியினையினை வெறுத்து அவரை படுதோல்வி அடைய வைத்தனர். ஆனால் தோல்வியடைந்த ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் வழங்கியுள்ளமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிலும் காத்தான்குடியின் நல்லாட்சியை விரும்பும் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவும் அம்மக்களின் சந்தோஷமான சமாதானமான வாழ்க்கைக்கு பெரும் சவாலாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் நடாத்திய அட்டகாசம் இந்நல்லாட்சியில் நடந்திருக்கும் பெரும் அதிர்ச்சியான அட்டூழியங்களாகும் இதுபோன்று எங்கு ஏற்பட வில்லை ஒரு பள்ளியினைத் தாக்கியிருக்கிறார்கள் பள்ளியினுள் இருந்த ஒருவர் மற்றும் தனியாருக்குச் சொந்தமான கடை உடைக்கப்பட்டுள்ளது கர்ப்பிணிப்பெண் தாக்கப்பட்டுள்ளார். இப்படியான காடைத்தனங்களை செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இப்புதிய அரசாங்கத்தின் நல்லாட்சியில் இப்படியான அநியாயம் அட்டூளியம் நடந்திருப்பது இதுவே முதல் முறையாக இருப்பது வெட்ககரமானது.
இதனை வன்மையாகக் கண்டிக்கவேண்டும். இப்படிக் கீழ்த்தரமான விடையங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இப்படியானவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் பிரதி அமைச்சர் இதனை தடுக்காமல் தனது ஆதரவாளர்களுக்கு அனுமதியளித்திருப்பது மிகக் கேவலமாக இருக்கிறது. என்று தெரிவித்தார்.
எனவே ஆட்சியினை யாருக்கு வழங்கக் கூடாது என்று மக்கள் விரும்பினார்களோ அவருக்கு பதவி வழங்கப் பட்டிருப்பதானது இன்றைய நல்லாட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிலும் நல்லாட்சியை விரும்பி ஹிஸ்புல்லாவை தோற்கடித்த இக்காத்தான் குடி மக்களுக்கு பெரும் கேள்விகுறியாக இருக்கிறது என்ரும் தெரிவித்தார்.
இப்படியான மக்கள் விரும்பாத அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் அல்லது கட்சிகள் தேசியல் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கொடுத்து மக்களை ஏமாற்றுவது இனிமேலும் நடைபெறக் கூடாது என்றும் தனதுரையில் குறிப்பிட்டார்.