Published On: Friday, August 28, 2015
அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் மு.காவின் கைவசம்! அபிவிருத்திகள் பாரபட்சமின்றி இடம்பெறும் - ஹரீஸ் எம்.பி
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வெற்றிக்கு வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்றிரவு (27) நேரடி விஜயம் செய்த ஹரீஸூக்கு அப்பிரதேச மக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
வரிப்பத்தான்சேனைக்கு முதலில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸை இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.நைஸர் தலைமையிலான வரிப்பத்தான்சேனை முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.நைஸர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.ஆசிக், யூ.எல்.சுலைமாலெவ்வை உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரிப்பத்தான்சேனை மத்திய குழு உறுப்பினர்கள், இளைஞர்கள், போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்;.
இதனை அடுத்து இறக்காமம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸையும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரை இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஜெமீல் காரியப்பர் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
இதன்போது ஹரீஸ் எம்.பி இறக்காமம் வர்;த்தகர்களுக்கு நேரடியாக சென்று தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன் வர்த்தகர்கள் இன்முகத்துடன் ஹரீஸ் எம்.பியை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்,
தேர்தலில் எனது வெற்றிக்கு வாக்களித்த கட்சிப் போராளிகளுக்கும், மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத்தேர்தலில் மக்கள் வழங்கிய இந்த அமானிதமான ஆணையினை கொண்டு இப்பிரதேச மக்களின் அபிவிருத்தி, அபிலாஷைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.
அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் மு.காவின் கைவசம் கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி எமது மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் அபிவிருத்தி வேலைகள் பாரபட்சமின்றி இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
(ஹாசிப் யாஸீன்)