Published On: Monday, August 24, 2015
ரொனி பிளேயர் ஜனாதிபதியை சந்தித்தார்
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்திருந்த ரொனி பிளேயர் அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலை மிகவும் அமைதியான முறையிலும் சுதந்திரமான முறையிலும் நடத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை ரொனி பிளேயர் இச்சந்தர்ப்த்தில் பாராட்டினார்.
இலங்கையினுடைய சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதற்கு தன்னாலான பங்களிப்பினை வழங்குவதாகவும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் குறிப்பிட்டார்.
( ஜனாதிபதி ஊடகப் பிரிவு )