Published On: Monday, August 31, 2015
தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளின்இ இன்றைய சந்திப்பில் நடந்தது என்ன??
30.08.2015
ஊடக அறிக்கை
தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளான தமிழ் விடுதலை இயக்கம் ( ரெலோ ) தமிழ் மக்கள் விடுதலை கழகம் (புளொட்)இ ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபி .ஆர் .எல் .எப்) ஆகியவற்றின் உயர் மட்ட உறுப்பினர்கள் கொழும்பில் 2015 ஆகஸ்ட் 30ம் திகதி (இன்றைய தினம்) கூடி தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரங்கள் தொடர்பாகவும்இ அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
மேலும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வர இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்ட தொடர் பற்றியும் இ இலங்கையில் நடைபெற்ற போரின் பொழுது நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பற்றியும் கலந்துரையாடப் பட்டது.
அத்துடன் வரும் ஜெனீவா கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கை அரசுடன் இணைந்தது கொண்டு வரவிருக்கும் தீர்மானம் தொடர்பாகவும் கலந்துரையாடப் பட்டத்துடன் உள்ளகப் பொறிமுறையை நிராகரித்து சர்வதேச நீதி விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுத்துக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை வலியிறுத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்னரும் அதன் பின்னரும் கூட்டமைப்புக்குள் ஏற்ப்பட்டு வரும் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நான்கு கட்சிகளும் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டமைப்புக்கள் ரீதியாக பலப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் ஆராயப்பட்டது
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் –தலைவர் –சித்தார்த்தன் (பா.உ)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி –தலைவர் –க.சுரேஷ் பிறேமச்சந்திரன் –(முன்னாள் பா .உ.)
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் –தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (பா .உ )