Published On: Tuesday, August 25, 2015
எனது பெயரில் வெளியிடப்பட்டுள்ள கடிதத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை:U.L.M.N. முபீன்.BA
24-08-2015 ல் “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு முபீனின் பகிரங்க கடிதம்” என்ற செய்திக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் காத்தான்குடி அமைப்பாளருமான யூ.எல்.எம்.என். முபீனின் மறுப்பறிக்கை.
கடந்க 24-08-2015 அன்று திங்கள் கிழமை “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களுக்கு முபீன் எழுதும் கடிதம்” என ஒரு கட்டுறை சில சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இக்கட்டுரை வடிவிலான கடிதத்தை பார்வையிட்ட சில சகோதரர்கள் தொலைபேசியிலும் நேரடியாகவும் என்னிடம் இது தொடர்பில் வினவினர். இதன் பின்பே இத்தகய கடிதம் வெளிவந்துள்ளதை நான் அறிந்து கொண்டேன்.
அக்கடிதத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தொடர்பில் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனிக்கு தேசியப்பட்டியல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.
உண்மையில் இக்கடிதத்திற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரான (முபீனுக்கும்) எனக்கும் எந்தத் தொடர்புமில்லையெனவும் இக்கடிதத்தை நான் எழுதவில்லை எனவும் இத்தால் தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
இக்கடிதத்தை வாசிக்கும் வாசகர்கள் இதை நானே எழுதியதாக கருதிக் கொள்ளும் வகையில் இக்கடிதம் வரையப்பட்டுள்ளது.
அத்துடன் வன்னி திருகோணமலை மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிட்டவர்களை கொச்சைப்படுத்தியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கண்டி மாவட்டத்தில் வெற்றி பெற்றது பணபலத்தின் மூலமே என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பக்கச்சார்பாக நடந்து கொண்டார் என்றும் தேசியப் பட்டியல் கோறுகின்ற வேறு சில ஊர்களின் நியாயங்களை கொச்சைப்படுத்தியும் இக்கடிதம் வரையப்பட்டுள்ளது.
இக்கடிதத்தை எழுதியவர்கள் அல்லது எழுதியவரின் நோக்கம் எனக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க வேண்டும்மென்ற குறகிய அற்ப நோக்கமாகும் எனக் கருதுகின்றேன்.
தேசியப்பட்டியல் தொடர்பாக கட்சியின் உயர்பீட கூட்டத்திலும் இக்கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களிடம் காத்தான்குடிக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என இதுவரை வலியுறுத்தி வருகின்றேன்.
அத்துடன் தேசியப் பட்டியல் வழங்கும் போது நல்லாட்சிக்கான தேசிய முண்ணனிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கும் காலங்கள் பகிர்ந்து வழங்குமாறு கோரிவருகின்றேன்.
யாருக்கும் காத்தான்குடியில் தேசியப்பட்டியல் கிடைப்பதற்கு நான் தடையாக இருக்கவில்லை என்பதையும் தெரிவிப்பதோடு நல்லாட்சிக்கான தேசிய முண்ணனிக்கு தேசியப்பட்டியல் வழங்கினால் சந்தோசம் என்றே தலைமையிடம் தெரியப்படுத்தியுள்ளேன்.
இக்கடிதத்தை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட அவதானி என்ற இணையத்தள உரிமையாளர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட குறித்த ஒரு அரசியல் இயக்கத்தின் முக்கியஸ்தரிடம் சம்பளம் பெறுபவர் என்ற வகையில் இம் முகவரியற்ற கடிதத்தை வெளியிட்டதன் மூலம் தனது விசுவாசத்தை காட்ட முயன்றாரோ தெரியவில்லை.
அன்புடன்
குறித்த கடிதத்தை தலைவருக்கு எழுதாத..
யூ.எல்.எம்.என். முபீன்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்
அமைப்பாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
(ஜுனைட்.எம்.பஹ்த் )