Published On: Tuesday, September 15, 2015
சிங்கள-தமிழ் எழுத்தாளர்களின் ஒன்றுக்கூடல்கள்-செப்18-27
வருடந்தோறும் செப்டம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச புத்தக விற்பனையாளர்களும், பதிப்பகத்தாரும், வாசகர்களும் கலந்துக் கொள்ளும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இம்மாதம் 18ம்திகதி முதல் 27ம்திகதி வழமை போல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவுள்ளது.
இம்முறையிலான புத்தகக் கண்காட்சித் திடலில் அமைக்கப்பெற்ற குடிலில் (HUT) சிங்கள-தமிழ் எழுத்தாளர்கள் வாசகர்கள் கலந்துக் கொள்ளும் வகையில் தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவுள்ளன. இந்த நிகழ்வுகளை இலங்கைக்கான எழுத்தாளர் அமைப்பு இலங்கை புத்தகப் பதிப்பாளர்களின் சங்கத்தின் அனுசரணையுடன் ஏற்பாடுச் செய்துள்ளது.
மேற்படி நிகழ்வுகளில் ஆரம்ப நிகழ்வாக 18ம் திகதி 10.00 காலை மணிக்கு சிங்கள- தமிழ் எழுத்தாளர்கள் வாசகர்கள் ஒன்றுக்கூடல் இடம்பெறுவதோடு அன்று பிற்பகல் சிங்கள-தமிழ்க் கவிஞர்கள் கலந்துக் கொள்ளும் கவிதா நிகழ்வு இடம் பெறும்.
தொடந்து வரும் நாட்களில் சிங்கள தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான பல்வேறுத் தொனிப்பொருள்களில் கலந்துரையாடல்கள் இடம் பெறும்.
குறிப்பாக 26ந்திகதி பிற்பகல் 2.30 மணிக்கு சிங்கள-தமிழ் இலக்கிய உறவுகள் எனும் தொனிப்பொருளில் சிங்கள-தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றியும், இரு மொழி இலக்கிய வளர்ச்சியினை பற்றியும் கலந்துரையாடல் என்பது குறிப்பிடதக்கது.
இக்கலந்துரையாடல்களில் சகல சிங்கள-தமிழ் எழுத்தாளர்கள் வாசகர்கள் கலந்துக் கொள்ளுமாறு இலங்கை எழுத்தாளர்களுக்கான அமைப்பு திறந்த அழைப்பு விடுத்துள்ளது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)