Published On: Wednesday, September 09, 2015
முதலமைச்சரின் களப்பயணம் இரண்டாம் நாளின்போது
உள்ளூராட்சி வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் திணைக்களங்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஆகிய குழுவினர் நேரில் விஜயம் செய்து அரச காரியாலங்களின் வேலைத்திட்டங்களின் குறைபாடுகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை நேரில் கண்டறியும் நிகழ்ச்சி நிரலின் இரண்டாம் நாளான இன்று புதன் கிழமை நண்பகல்வரை செங்கலடி பிரதேச சபை, ஓட்டமவடி பிரதேச சபை, ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இது போன்று நாளை, மற்றும் நாளை மறுதினம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மீதமான சகல மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகள், கல்வித் திணைக்களம், போக்குவரத்து அதிகார சபை, கிராமிய அபிவிருத்தி சபை, கைத்தொழில் திணைக்களம், சுகாதார திணைக்களம், கட்டடத் திணைக்களம் போன்றவற்றுக்கு அவர்கள் தொடர்ந்தும் 4 தினங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இதன்போது சபைகளின் தேவைகள் ஆளணிப்பற்றாக்குறை சம்மந்தமாகவும் ஆட்களை நியமிப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இன்றைய விஜயத்தின்போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னஇ கருணாகரன், நடராசா, துரை ரட்ணம், மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.சலீம்
(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)