Published On: Thursday, September 10, 2015
கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாக கல் என்பன கண்டுபிடிக்கபட்டுள்ளன.
மட்டக்களப்பு - வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாக கல் என்பன கண்டுபிடிக்கபட்டுள்ளன.
இலங்கையின் பூர்வீக குடியினராக காணப்பட்ட தமிழர் மூதாதயரான ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு நாக வம்சத்தினர் தென்னிந்தியாவின் சோழமண்டல கடற்கரையிலுள்ள காவிரி பூம்பட்டிணம் போன்ற துறைமுக பட்டிணம் மூலமாக கடல்வழி மார்க்கமாகவந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேறினர்;.
இவ்வாறு கடல்வழிமார்க்கமாக வந்த ஆதி இரும்பு காலத்து பெருங்கற்காலபண்பாட்டு நாகவம்சத்தினர ஆற்றுவழிமார்க்கமாகவும் தரைவழிமார்க்கமாகவும் தங்களது குடியேற்றங்களையும் குறுநில அரசுக்களையும் நதிக்கரைக்கு அண்மையில் உள்ள உயர்வான இடங்களிலும் மலைச்சாரல்களிலும் காடுகளை எல்லைகளாக கொண்ட பிரதேசங்களிலும் புல்நிலங்களிலும் வெட்டவெளி சமவெளி நிலங்களிலும் நிறுவினர்.
அந்தவகையில் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையாரடியில் நாகரால் நிறுவபட்ட குறுநில அரசானது கடல்வழி ஆற்றுவழி தரைவழி என்பவற்றோடு தொடர்வுடையதாகவும் காடுகளை எல்லையாகவும் சமவெளி நிலமாகவும் காணப்பட்டுள்ளது. இங்கு கண்டுபிடிக்கபட்ட கிணறானது 3அடி விட்டமுடைய சதுரவடிவமும் 20அடி ஆழமுடைய கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்படடுள்ளது. தூணின் வேள் நாகன் என்று தமிழ் பிராமி வரிவடிவம் காணப்படுகின்றது.
3அடி உயரமும் 2அடி அகலமுடைய நாக கல் காணப்படுகின்றது. இதில் மணி நாகன் என்று தமிழ் பிராமி வரிவடிவம் காணப்படுகின்றது.கிணறுகள் மூலமாக நீரினை பெற்று பயன்படுத்தும் முறையினையும் தோட்ட பயிர் செய்கையினையும் இங்கு குடியேறிய நாகவம்சத்தினர் உருவாக்கினர். இவ்விடம் நாகர்களின் வழிபாட்டு தலமாக காணப்பட்டதோடு கருங்கல் தூண்களினால் ஆலயத்தை அமைத்துள்ளனர்.
ஆனால் பிற்காலத்தில் ஆலயத்தில் உள்ள தூண்களை எடுத்து மக்கள் இளைப்பாறும் அம்பலம் ஒன்று ஆலயத்திற்கு அண்மையில் அமைத்துள்ளனர். ஆனால் அம்பலத்தின் எச்சம் மட்டும் ;தற்போது காணப்படுகிறது.இங்கு கண்டுபிடிக்கபட்ட சான்றுகள் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவானவை எனவும் நாகரின் குறுநில அரசுப்பிராந்தியமாகவும் காணப்பட்;டுள்ளது. இதுகாலவரை ஆலயத்திற்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நாகர் கல் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்பட்டபோதிலும் அதன் வரலாற்றுத்தொன்மைபற்றி எவரும் அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)