Published On: Thursday, September 10, 2015
குண்டு இருப்பதாக கூறிய பொலிஸாரின் நடவடிக்கையில் தோட்ட மக்கள் பெரும் அச்சத்தில்
அரச தோட்டமான புப்புரஸ்ஸ லெவலன் தோட்டம் மணிக்கட்டி பிரிவில் நேற்று இரவு (2015.09.09) கஹகா பொலிஸ் நிலையத்திற்கு குறித்த தோட்ட குடியிருப்புக்களில் குண்டு இருப்பதாக கிடைத்த முறைபாடு ஒன்றின் பிரகாரம் ஸ்ததிற்கு விரைந்த பொலிஸார் அதிரடி நடவடிக்ககையில் குண்டை தேடியதில் தோட்ட மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் பொருட்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குண்டு அங்கு இருக்கும் இங்கு இருக்கும் என்னு தேடியதினாலயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு 12 மணியளவில் இந்த தேடுதல் நடவடிக்ககை மேற்க் கொண்டதால் மக்கள் பதஷ்டத்திற்கு உள்ளானதுடன் இன்று (2015.09.10) தொழிலுக்கும் செல்லவில்லை.
நிலமை தொடர்பாக மக்களிடம் வினவிய போது இரவு 12 மணியளயில் உங்கள் வீட்டில் குண்டு இருக்கின்றது என்று கூறி பரிசோதிக்க வேண்டும் என்று 04 பொலிஸார் பொருட்களையும் சமைத்த உணவுகளையும் தூக்கி வீசி தேடினர் இதனால் நாங்கள் பெரிதும் பயத்திற்கு உள்ளானதுடன் செய்வதரியாது பயந்து விட்டோம். சிறுவர்கள் அச்சத்திற்கு உள்ளானர்கள். உணவுகள் கூட பொலிஸாரினால் சேதமாக்கபட்டது. நாங்கள் இரவு சாப்பிடக் கூட இல்லை. இந்த செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்தனர்.
இந் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த தோட்டத்தில் பிள்ளை பாராமரிக்கும் நிலைத்தில் தோட்டத்தில் தொழில் செய்வோரின் பிள்ளைகள் மாத்திரம் பராமரிக்கப்படுகின்றன. தொழில் செய்யாதோரின் பிள்ளைகள் பராமரிக்கப்படுவதில்லை. இந் நிலையில் தொழில் செய்யாதோரின் பிள்ளைகளுக்கு தோட்டத்தில் காணப்பட்ட சனசமூக நிலைத்தில் பிரத்தியோக பிள்ளை பராமரிப்பும் பாலர் பாடசாலையும் தோட்ட மக்களினால் ஆரபிக்கபட்டது. இதனை ஆரபிப்பதற்கு அரச தோட்டமான இந்த தோட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இதனால் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் கருத்து முறன்பாடு ஏற்பட்டு பிரச்சனை மாற்று வடிவமாக மாறியுள்ளது. மேற்ப்படி செயற்பாட்டுக்கு முன்னின்றவர்களின் வீடுகளோ குண்டு இருப்பதாக பரிசோதிக்கப்ட்டுள்ளது.
இந் நிலமை தொடர்பாக தோட்ட நிர்வாகத்துடன் வினவிய போது குறித்த குண்டு விபரமாக எங்களுக்கு ஒன்றும் தெரியாது. பொலிஸாருக்கு யாரோ தப்பான தகவலை வழங்கியுள்ளனர். தற்போது பாலர் பாடசாலை நடாத்த தோட்ட மக்கள் எத்தனிக்கும் இடம் தோட்டத்திற்கு உரியது அதில் மக்கள் நலம் சார்ந்த விடயங்களே நடாத்த முடியும். இங்கு கரப்;பினி தாய்மார்களின் கிலினிக், கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் மாத்திரமே நடைத்த முடியும் அப்படி வேறு எதுவும் நடாத்துவது என்றால் எங்களிடம் அனுதி பெற வேண்டும் என்றார். எது எப்படியாயினும் குறித்த மணட்டபம் மக்களுக்குறியது அதில் மக்கள் நலன்சார் அனைத்து விடங்களையும் செய்ய முடியுமானால் ஏன் பாலர் பாடசாலை நடாத்த முடியாது? மணட்பமமோ தோட்ட இளைஞர்களினால் தொலுவ பிரதேச காரியாலயத்தில் பதிவு செய்யபட்டடுள்ளது. அது அவர்களுக்கு என கட்டப்பட்டது. இதை அரச தோட்ட நிர்வாகம் தடை செய்வது வேதனைக்குறியதே.
இதற்கான தீர்வு குறித்து கலஹா பொலிஸாரிடம் வினவிய போது இந்த விடயம் குறித்து தங்களுக்கு ஒன்றும் கூர முடியாது என்றும் இது தொடர்பான விடயங்கள் பொலிஸ் ஊடக பேச்சாளருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
- அபு அலா -