Published On: Sunday, September 13, 2015
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிகழ்வு
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 74 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலற்துகொண்டார்.வலயக் கல்விப்பணிப்பாளர் எம் ஐ சேகுஅலி தலைமையில் இம்மாநாட்டில் மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்ரிஎம் நிஸாம் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி,உதவி, கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், துறைசார் இணைப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டனர்.
(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)