Published On: Thursday, September 10, 2015
மத்திய மாகாண சபை உறுப்பினராக ஹிதாயத் சத்தார் பதவிப்பிரமாணம்
கண்டி யஹலத்தென்னையை சேர்ந்த ஹிதாயத் சத்தார் மத்திய மாகாண சபை உறுப்பினராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த போது தேர்தலில் போட்டியிட்டு மூன்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு தெரிவு செய்யப்படவர்களில் ஹிதாயத் சத்தார் இடம்பிடித்திருந்த நிலையில் அவர் மத்திய மாகாண சபை உறுப்பினராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்இமத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஹிதாயத் சத்தார் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி முகாமையாளரும், அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் முஸ்லிம் விவாகார செயலாளரும், தென்னை பயிர்செய்கை சபை முன்னாள் தலைவரு ஆவார்...