எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter

பொதுமக்களுக்கான அரச சேவையினை தடையின்றி வழங்க சகல உத்தியோகத்தர்கள்புதுவருடத்தில் திடசங்கப்பம்; பூணவேண்டும் - உதவிப் பிரதேச செயலாளர் றிகாஸ்

அரச சேவையினை மக்களுக்கு தடையின்றி வழங்க சகல உத்தியோகத்தர்கள் புதுவருடத்தில்திடசங்கப்பம்பூனவேண்டும் என சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் .எம்.றிகாஸ்தெரிவித்தார்.






புதுவருடத்தை முன்னிட்டு  சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களதுகடமைகளை சத்தியப் பிரமாணம் செய்து ஆரம்பிக்கும்நிகழ்வு ,ன்று (02) திங்கட்கிழமைசாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் .எம்.றிகாஸ் தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.ஜஃபர்நிர்வாக உத்தியோகத்தர்எம்.வாஹிட்சமுர்த்தி தலைப்பீட முகாமையாளர் .சீ..நஜீம் உள்ளிட்ட பிரதேச செயலகஉத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசியக் கொடி உதவிப் பிரதேச செயலாளர் .எம்.றிகாஸினால்ஏற்றிவைக்கப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டு காரியாலய நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சகல உத்தியோகத்தர்களும் தங்களது புதுவருட கடமையை ஆரம்பிக்குமுகமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்போது தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

கடந்த வருடம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி எமது காரியாலயத்திற்கு நற்பெயரைத்தேடித்தந்த சகல உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்ததுடன் புதுவருடவாழ்த்துக்களையும் உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்தார்.

பிறந்திருக்கும் புதுவருடத்தில் எமது பிரதேச மக்களுக்கு அரச சேவையினை தடையின்றிவழங்க சகல உத்தியோகத்தர்களும் திடசங்கப்பம் கொள்ள வேண்டும் எனவும்கேட்டுக்கொண்டார்.

2017ம் ஆண்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  வறுமை ஒழிப்பு ஆண்டாகபிரகடனப்படுத்தியுள்ளார்இத்திட்டம் வெற்றிபெற சகல உத்தியோகத்தர்களும் தங்களது பூரணஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

தற்போது எமது பிரதேச செயலக பிரிவில் டெங்கு காய்ச்சல் அபாயம் ஏற்பட்டுள்ளதுஇதனால்மக்கள் பீதியடைந்துள்ளனர்டெங்குக் காய்ச்சலினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில்சுகாதார திணைக்களத்துடன் இணைந்து எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்தீவிரமாகவும்அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்றனர்இதனையிட்டு நான்பெருமையடைவதோடு எமது உத்தியோகத்தர்களை பாராட்டுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

(றியாத் மஜீத்)
Tuesday, January 03, 2017 |
மேலும் »

அஹமத் முனவ்வரின் நூல் வெளியீடு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம்.இஷட். அஹமட் முனவ்வர் எழுதியஇலங்கை வானொலி முஸ்லிம் சேவை+ கலாபூஷணம் எம்.இஸட். அஹமத் முனவ்வர்எனும்  நூல் வெளியீடும் மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு மேல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் தஃவா பணி புரிந்தவர்களான  உலமாக்களுக்குபொற்கிழிவழங்கி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இம்மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு - 07இல் அமைந்துள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.



முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஸமீல் (நளீமி) தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக வெகுஜன ஊடகங்கள் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும், பாராளுமன்ற பிரதம கொரடாவுமான கயந்த கருணாதிலக கலந்து கொள்கிறார்.

நூலின் முதற்பிரதியை மூஷான் இன்டர்நெஷனல் தலைவர், முஸ்லிம் ஸலாஹுதீன் பெற்றுக் கொள்கிறார்.
நிகழ்வில், “ஊடகமும் முஸ்லிம்களும்எனும் தலைப்பில் கொழும்பு கோட்டே ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் விசேட சொற்பொழிவொன்றை நிகழ்த்தவுள்ளார்.
விழாவின் கௌரவ அதிதிகளாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன், மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, தபால் தொலைத் தொடர்புகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச். ஹலீம்தேசிய ஒருங்கிணைப்பு உரையாடல் அமைச்சர் மனோ கணேஷன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர்ரஹ்மான், கொழும்பு மாவட்ட முன்னாள் மேயர் .ஜே.எம். முஸம்மில் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

விசேட அதிதியாக மலேசிய டீ.டீ. இன்டர் நெஷனல்  பணிப்பாளர் அஷ்ஷெய்க் மௌலானா முஹம்மத் அப்துல் காதிர் மற்றும் சிங்கப்பூர் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் பொது உறவுகள் மற்றும் வணிக ஆலோசகருமான செயிட் ஜஹாங்கீர் மற்றும் தமிழ் நாடு, சென்னையிலுள்ள ஹாஜரா ட்ரேடர்ஸ் உரிமையாளரான எம்.எஸ். றஹ்மதுல்லாஹ் ஆலிம் இப்னு சம்சுதீன் ஆலிம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் விசேட பேச்சாளரை அறிமுகம் செய்வதோடு, நூல் நயவுரையை - அட்டுளுகம, அல்- கஸ்ஸாலி மத்திய கல்லூரி அதிபர் அஷ்செய்க் எம்.ஜே.எம். மன்சூர் (நளீமி) நிகழ்த்தவுள்ளார்.

பிஞ்சுமனம்சிறுவர் நிகழ்ச்சிவாயிலாக வானொலியில் கால் பதித்த அஹ்மத் முனவ்வரின் ஊடகப் பணி விரிவாகி - விசாலமடைந்ததினால் அவர் முஸ்லிம் சேவையின் பணிப்பாளராகவும் பதவியேற்றார்.

எல்லாத் துறை சார்ந்தோரின் நட்பும் இவருக்கு இருக்கிறது. அதனால்தான் ஊடகத்துறைக்கு அப்பாற் சென்று சமுதாய தாக்கத்துக்குரிய பல நிகழ்வுகளை இவரால் சிறப்பாக நடத்த முடிந்தது. கல்வித்துறையில் நம் சந்ததியினர் மேலோங்கவும் சமுதாய விழிப்புணர்வை காணவும் இவர் முன்னின்று நடத்திய நிகழ்வுகள் எல்லாமே மெச்சுக்குரியவைகளே!

வெளிவரவிருக்கும் இவரதுஇலங்கை வானொலி முஸ்லிம் சேவை+ கலாபூஷணம் எம்.இஸட். அஹமத் முனவ்வர்எனும் நூல் முஸ்லிம் சேவையின் வரலாற்றுப் பின்னணியை இளைய தலைமுறையினருக்கு வெளிப்படுத்துகிறது. உலமாக்களை, அறிஞர்களை, மூத்தோரை நம் இளையோரை கண்ணியப்படுத்தி கௌரவப்படுத்தும் இவரது பங்களிப்புகள் எவரையும் ஈர்க்கக் கூடியவைகளே!

இவ்விழாவில், கௌரவிக்கப்படும் உலமாக்கள் முறையே  வெலிகம - மௌலவி ஜமாலியா செய்யத் ஹாரிஸ் மௌலானா, கொழும்புமௌலவி எம்.எம். .முபாரக், நாவலப்பிட்டிய - எம்.கியூ. புர்கானுதீன் அஹமத், நீர் கொழும்பு - மௌலவி எம்.சி. ஹஸ்புல்லாஹ் அப்துல் காதர், சம்மாந்துறை - மௌலவி .சி..எம். புஹாரி, கள் - எலிய - மௌலவி .எல்.அலியார், மக்கொன - மௌலவி எம்.ஆர்.எம். நிஷாம், கொழும்பு - மௌலவி யூசுப் நஜிமுடீன், கொழும்பு - காதிபுல் குலபா மௌலவி ஜே.அப்துல் ஹமீட், கஹடோவிட மௌலவி எம்.இஷட்.எம். ஹுசைன், உயன்வத்த - மௌலவி முக்தார் . செய்னுடீன், மல்வானை - மௌலவி எம்.எச்.எம். லாபீர், தெஹிவளை - மௌலவி .ஆர்.அப்துல் றஸ்ஸாக், கஹடோவிட - மௌலவி எம்.என்.எம். இஜ்லான், திஹாரிய - மௌலவி எம்.ஆர்.எம். மஹ்ரூப், கொழும்பு - மௌலவி எம்.. அப்துல் ஜப்பார், தெஹிவளை - மௌலவி எஸ்.எம்.ஆரிப், கள் - எலிய - மௌலவி எம்.வை.எம். ஜாபீர், கலாவெவ - மௌலவி ஜே.எல். சலாஹுதீன், மொரட்டுவ - மௌலவி ஜே. மீராமுஹைதீன், கஹடோவிட - மௌலவி ..எம். அப்துல் சலாம், சாய்ந்தமருது - மௌலவி .எம்.. அஸீஸ், கொழும்பு - மௌலவியா  மலீஹா சுபைர், கொழும்பு - மௌலவி எம். முஸ்னி அமீர், கஹடோவிட - மௌலவி எம்.எஸ்.எம். இஸ்மாயில், வெலிகம - மௌலவி எம்.ஆர்..எம். அஸ்ஹர், கஹட்டோவிட்ட - மௌலவி எம்.. எம்.அலவி ஆகிய உலமாக்கள் தலா 10,000 ரூபா பெறுமதியானபொற்கிழிவழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.


இந் நிகழ்வில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பணிப்பாளர்கள், விரிவுரையாளர்கள், பிரபல உலமாக்கள்இலக்கியப் புரவலர்கள், பிரபல வர்த்தகர்கள், கலை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள்எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


(எம்.எஸ்.எம்.சாஹிர்)
Thursday, August 04, 2016 |
மேலும் »

துறைமுக அதிகார சபை ஊழியர்களின் விழிப்புணர்வு பாதயாத்திரை

இலங்கை துறைமுக அதிகாரசபையின் 37ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறுநீரக நோயாளர்களுக்கு துறைமுக அதிகார சபையினால் நிதி சேகரித்து பங்களிப்பு செய்யும் முகமாக விழிப்புணர்வு சம்பந்தமான பாதயாத்திரை  துறை முக அதிகாரசபை ஊழியர்களினால் (02.08.2016) மேற்கொள்ளபட்டது.




துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கிணங்க, துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்பிக ரணதுங்கவின் தலைமையில்(02.08.2016) காலை 8 மணி முதல் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பித்து துறைமுக அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு முன்னால் 11 மணியளவில் பாதயாத்திரை நிறைவு பெற்றது.


இதில் துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்பிக ரணதுங்க, உட்பட உயர் முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பகுதி தலைவர்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் துறைமுக ஊழியர்கள் என சுமார் 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.சாஹிர்)
Thursday, August 04, 2016 |
மேலும் »

26வது ஆண்டு ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக –காத்தான்குடியில் -மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்-படங்கள்.


'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்',இரத்ததானம் -உயிர் காக்கும் நம்பிக்கை  எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 27 வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் மனிதாபிமான மற்றும் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் 1990ஆம் ஆண்டு காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ஷூஹதாக்களின் ஞாபகார்த்த நினைவாக  5வது மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம் 03-08-2016 இன்று புதன்கிழமை காத்தான்குடி-01 ஐ.வை.எப். கல்வி மையத்தின் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் இடம்பெற்றது.




இஸ்லாமிய இளைஞர் முன்னணியின்; தலைவர் பீ.எம்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி 5வது இரத்ததான முகாமில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்,முக்கியஸ்தர்கள், கல்வியலாளர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள்,தாதியர்கள்,காத்தான்குடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் என பலரும் கலந்து கொண்டனர்.






இதன் போது இரத்ததானம் வழங்குவோரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் எம்.எம்.எம்.அயாஸ் பரிசோதித்தார்.

இங்கு ஆண்கள் ,பெண்கள்,இளைஞர்கள்,யுவதிகள் தங்களது இரத்தத்தை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கினர்.

குறித்த காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூக,கல்வி,தஃவா ஆகிய பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
Thursday, August 04, 2016 |
மேலும் »
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2