எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, March 12, 2013

மனம் விரும்பி செக்ஸ் ,வயது வரம்பு 18லிருந்து 16 ஆக குறைகிறது; வருகிறது சட்டம்

Print Friendly and PDF


மனம் விரும்பி  செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான வயதை 16 ஆக குறைக்க இந்திய  மத்திய அமைச்சர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பான ஒப்புதல் விரைவில்மத்திய அமைச்சரவையில் வழங்கப்படவுள்ளது. 

மேலும் கற்பழிப்பை ஒரு பெரும் குற்றச் செயலாகவும் இந்த சட்டம் அங்கீகரிக்கவுள்ளது. குற்றவியல் திருத்தச் சட்டம் 2013ல் 2 முக்கிய அம்சங்கள்தொடர்பாக அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

அதில் ஒன்று மனம் ஒத்து செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான வயது நிர்ணயம். 2வது கற்பழிப்பு சம்பவத்தில் ஆண், பெண் இருவரையும் சம நிலையில் வைத்துப் பார்ப்பது தொடர்பானது. அதில், தற்போது மனம் ஒத்து செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான வயதை 16 ஆக குறைப்பதற்கு அமைச்சர்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாம். அதேபோல கற்பழிப்பு சம்பவத்தில் ஆணுக்கே அதிக பங்கு இருக்கும் வகையில் சட்ட மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 அதாவது ஆண்தான் இதில் குற்றவாளி, பெண் பாதிக்கப்பட்டவராக மட்டுமே கருதப்படுவார். கருத்தொற்றுமை ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்றே இந்த சட்ட மசோதா அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் தரப்படும் என்று தெரிகிறது. தற்போதைய சட்டப்படி 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் மைனராக கருதப்படுகிறார். சமீபத்தில் டெல்லியில் ஓடும் பேருந்தில் பிசியோதெரப்பி மாணவி பாலியல் பலாத்காரம்செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவன் மைனர் என்பதும், அவனுக்கு 18 வயதுக்குக் கீழ் ஆகிறது என்பதும் அனைவரையும் அதிர வைத்தது.

 மேலும் மைனர் என்ற ஒரே காரணத்திற்காக கொடும் குற்றம் புரிந்த அவனுக்கு பெரும் தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை என்பதும் அனைவரையும் அதிரவைத்தது. இதையடுத்து மைனருக்கான வயதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி கற்பழிப்பு தொடர்பான சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையிலேயே திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

 வர்மா கமிஷன் மைனருக்கான வயதை 16 ஆக குறைக்க பரிந்துரைத்திருந்தது. இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள்நலத்துறை ஆதரவு தெரிவித்திருந்தது. அதேசமயம், வேறு சில துறைகளின் அமைச்சர்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இது சிறார் பாலியல் குற்றங்களுக்கு வழி வகுக்கும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. தற்போது இதில்கருத்தொற்றுமை ஏற்பட்டு வயதை 16 ஆக குறைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தசட்ட திருத்தத்தில் உள்ள பிற முக்கிய அம்சங்கள் கற்பழிப்பு குற்றங்களுக்கு இனி ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

 பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்து உதவிகள் அளிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும். இந்க மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின்னர் நாடாளுமன்றத்தில் இந்த வாரத்திலேயே அது தாக்கல்செய்யப்பட்டு மார்ச் 22ம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்றுதெரிகிறது. 

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2