Published On: Wednesday, March 13, 2013
சிறுமியுடன் குடும்ப வாழ்க்கையில் 'குதுகலித்த' இளைஞன் ஆனமடுவையில் கைது

ஆனமடு பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இந்தச் சிறுமி தரம் ஆறுவரை கல்வி கற்றுள்ளதாகவும் இவரது தாயார் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞனுடன் சிறுமிக்கு காதல் தொடர்பு இருந்துள்ளது.
இந்நிலையில் சிறுமியை கடத்திச் சென்று இளைஞன் குடும்ப வாழ்வை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து சிறுமியும் இளைஞனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சந்தேகநபரை ஆனமடு நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடு பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.