எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 17, 2013

ஜெயலலிதாவும் கருணாநிதியும் முடிந்தால் இந்தியாவில் தமிழீழத்தை உருவாக்கட்டும்

Print Friendly and PDF


தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் ஒன்றுசேர்ந்து இலங்கையில் மீண்டும்    இனப்பகை நெருப்பு புகையை ஏற்படுத்தி இலங்கைத் தமிழ் மக்களின் ஓர் இருண்ட யுகத்திற்கு கொண்டுசெல்ல முற்படுகின்றனர். முடிந்தால் இவர்கள் இந்தியாவில் ஒரு தமிழீழத்தை உருவாக்கி காட்டட்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித வேறுபாடுமின்றி ஒரு தாய் நாட்டு மக்கள்போல் ஜக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதிகளைப் போன்றவர்கள்தான்  ஒன்றுசேர்ந்து இலங்கையில் மீண்டும் ஒரு இனப்பகைமையை ஏற்படுத்தி நாட்டினை ஒரு நெருப்பு புகையை ஏற்படுத்தி மக்களிடையே இருண்ட யுகத்திற்கு  கொண்டு செல்ல முற்படுகின்றனர். அதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் குளிர்காய முற்படுகின்றனர்.

மேற்கண்டவாறு நேற்று சனிக்கிழமை மாத்தளை ரோஸ்வத்தையில் 38 பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்தார். இவ்வைபவத்தில் மாத்தளை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் வசந்த பெரேரா, ஐனாதிபதியின் மேலதிகச் செயலாளர்  அனுர திசாநாய்கக அம்பகன்கஹ பிரதேச சபையின் உப தலைவர் நாகப்பன் யோகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச் காணியும் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2 இலட்சம் ருபா நிதியும் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக 3 ஏக்கர் நிலம் 38 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்துக் கோவில் மற்றும் பாதை நீர் வசதிகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படுகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் அங்கு உரையாற்றுகையில்; இந்த உலகில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு தணியான தமிழ்ஈழ நாடு தேவையென்றால் அது இந்தியாவில் உள்ள கர்நாடகா, கேரளா தமிழ்நாடு போன்ற பிரதேசத்தை கொண்ட தனியாணதொரு தமிழீழ நாடு உருவாக வேண்டும். அங்குதான் உலகில் உள்ள தமிழ் மக்களது பாரம்பரியம், இந்து மத வரலாறு. கலை கலாசாரம், மொழிகள் கொண்டதொரு தமிழ் மாநிலங்களாகும். இதற்காகவே தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் முதலில் தமக்கென ஒரு தமிழ்ஈழத்தை உருவாக்க போராட வேண்டும். இதற்குத்தான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியாவிலும்  ஐக்கியநாட்டுச் சபையிலும் போரடவேண்டும். 


இந்தியாவில் இதனைச் செய்யமுடியாமல்  இலங்கையில் ஒரு தமிழீழம் உருவாவதற்கு அவர்கள் குரல்கொடுப்பது ஒரு கோழைத்தனமானதெரு செயலாகும். இலங்கையில் மீண்டும் ஒரு தமிழ் ஈழம் உருவாக நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.  இங்கு எனக்கு முன் உரையாற்றிய அம்பகன் பிரதேச உப தலைவர் நாகப்பன் யோகராஜ் உரையாற்றுகையில்  தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் ஊடகங்களில் விமல் வீரவன்சவா அவர் ஒரு ஜே.வி.பி. அடிப்படைவாதி அவர் ஒரு இனவாதி என சித்தரிக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித் அமைச்சர் விமல், என்னை இந்த நாட்டில் உள்ள தமிழ் செய்திப் பத்திரிகைகள் என்னை ஒரு இனவாதியாக நாளாந்தம் எழுதித் தள்ளுகின்றனர். இந்தப் பத்திரிகைச் சொந்தக்காரர்கள் செயல்படுவதும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் அல்லது தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவர் இரா சம்பந்தன் அல்லது சுமேந்திரன் அகியோரின் நிகழ்ச்சி நிரல்களுக்குகேற்ப என்னை ஒர் இனவாதியாக சித்தரிக்கின்றனர். அப்படியென்றால் முழு நாட்டுக்கும் நான் எப்படியானவன் என்று இன்று இங்கு நடைபெறும் நிகழ்வு சான்று பகரும். 


இன்று 38 தமிழ் குடும்பங்களுக்கும் காணித்துண்டுகளும் வீடுகள், ஹிந்து கோவில், மிண்சாம் வசதிகள் கொண்ட ஒர தமிழ் கிராமமொன்றை உறுவாக்கும் விமல் வீரவன்ச ஒரு இனவாதியா எனக் கேள்வியெழுப்பினார். நான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபகரணை விமர்சித்தால் நான் ஒரு இனவாதியா? தமிழ் பத்திரிகையின் சொந்தக்காரர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே என்ணை இவாதியாக எழுதுகின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரவித்தார்.

(அஸ்ரப் ஏ. சமத்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2