Published On: Saturday, April 06, 2013
மட்டக்களப்பில் விபச்சார விடுதி முற்றுகை: 6 பேர் பொலிஸாரால் கைது

மட்டக்களப்பு ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 6 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.
மட்டக்களப்பில் உள்ள ஹோட்டல்களில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு குறிப்பிட்ட ஹோட்டலை பொலிசார் சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட பின்னர் பெண்கள் மூன்றுபேரையும், ஆண்கள் மூன்றுபேரையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பானது மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி.இந்திரனின் உத்தரவிற்கமைய நீதிமன்ற அனுமதியுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிஞ்சிலி குணசேகர தலைமையிலான குழுவினர் குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு அநாகரிகமான முறையில் இருந்த 6 பேரையும் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஆண்களில் இருவர் படைத்தரப்பில் முக்கிய பதவிகளை வகிக்கப்பவர்கள் என்றும் மற்றுமொருவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்றும் பெண்களில் காத்தான்குடி, கந்தளாய், பருத்திச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 6 பேரையும் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(எம்.பைஷல் இஸ்மாயில்)