எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, April 16, 2013

சமாதான தேசம் வேண்டும்

Print Friendly and PDF





நம்தேசம் நலமிழந்துவருகிறது
நம்பிக்கையும் நாணயமும் நம் கைநழுவிப் போகிறது
துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்துகேட்கிறது
துன்பமும் துயரமும் தொடர்ந்தேவருகிறது.

இனங்களுக்குள் முரண்பாடு இருந்தே வருகிறது
இதயங்கள் நசுங்குண்டு இரத்தம் கூடக் கசிகிறது
கருத்து மோதலினால் வருத்தம் தொடர்கிறது
கடந்தகால அனர்த்தங்கள் கண்முன்னே தெரிகிறது.

சுயநலவாதிகளும் சுகபோக அரசியலும்
இனவாதம் பசியதால் இந்த நிலை வந்ததுவோ!
ஆட்சியை பிடிப்பதற்காய் ஆர்ப்பரித்த வார்த்தைகளால்
வீழ்ச்சியை நோக்கியிங்கு நொந்துபோனதேசமிது.

இழந்தஎன் தேசத்தை ஏன் மீட்கமுடியாது?
முரண்பாட்டை நீக்கி நாம் சமன்பாட்டை நாம் பேணவேண்டும்
எல்லோரும் மனிதர்தான் என்று நாம் உணரவேண்டும்
மற்றவரின் உரிமைகளைமனதார மதிக்கவேண்டும்.

அதிகாரஆட்சியினை அடியோடு அகற்றவேண்டும்
சதிகார கும்பல்களை சத்தியமாய் விரட்டவேண்டும்
பரவலாக அதிகாரம்  பகிர்ந்தளிக்கப்படவேண்டும்
அலுவலாக வருவோரை அன்பாகநோக்கவேண்டும்.

இனிமேலும் இத்தேசம் இருண்டிருக்கமுடியாது
இதைப்பார்த்து என்னாளும் சுருண்டிருக்கமுடியாது
திரெண்டெழுந்துதேசத்தை சீர்படுத்த முயற்சிப்போம்
திருந்தியதேசம் ஒன்றைதிரும்பவும் நாம் காண்போம்.

-கவிஞர் நிந்தகத்தகமது-
   நிந்தவூர்.


Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2