Published On: Wednesday, April 17, 2013
12ஆம் திகதியிலிருந்து மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கின்றன

மின் கட்டணங்கள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைவாக இன்று புதன்கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டணங்கள் பின்வருமாறு அதிகரிக்கின்றது. 0-3 அலகுகளுக்கு 05 ரூபாவும், 61-90 அலகுகளுக்கு 8.50 ரூபாவும், 91-120 அலகுகளுக்கு 15 ரூபாவும், 121-180 அலகுகளுக்கு 20 ரூபாவும், 181-210 அலகுகளுக்கு 24 ரூபாவும், 211-300 அலகுகளுக்கு 26 ரூபாவும், 301-900 அலகுகளுக்கு 32 ரூபா, 900 அலகுகளுக்கு மேற்பட்டால் 34 ரூபாவும் அதிகரிக்கின்றது.
இந்த கட்டணங்கைளை ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.