Published On: Wednesday, April 03, 2013
அக்கரைப்பற்றில் சட்டவிரோதமாக கடல்மண் அகழந்த 4 பேர் கைது

அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கடல்மண் அகழ்ந்து ரைக்டரில் ஏற்றிக் கொண்டிருந்த 4 பேரை இன்று புதன்கிழமை அதிகாலை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ரைக்டரையும் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது.
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்று அதிகாலை அக்கரைப்பற்று முதலாம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடல் மண்ணை ரைக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தபோது குறிப்பிட்ட 4 பேருடன் ரைக்டரையும் கைது செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறியக்கிடைத்துள்ளன.
(எம்.பைஷல் இஸ்மாயில்)