Published On: Monday, April 01, 2013
யாழில் முஸ்லிம் குடும்பஸ்தரை கொலை செய்ய பயன்படுத்தி வாள் மீட்டு
யாழ்ப்பாணத்தில் அண்மையில் முஸ்லிம் குடும்பஸ்தரை கொலை செய்வதற்கு பயன்படுத்திய வாளை மீட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி விக்கிரமராட்சி தெரிவித்தார். மேலும் இதுதொடர்பில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றார். குறித்த வாள் கிணறு ஒன்றில் போடப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே மீட்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கிணறுகள் பொலிஸாரினால் இறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(பாறூக் சிகான்)