Published On: Thursday, May 02, 2013
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக அறுக்கப்பட்ட மாட்டிறைச்சி பறிமுதல்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியை ஏறாவூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த நபரொவருவர் கரடினாறு பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேக நபரிடமிருந்து 30 கிலோகிராம் பெறுமதியான மாட்டு இறைச்சியையும், இறைச்சி கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்இறைச்சி உறுகாமம் பிரதேசத்தில் இருந்து எடுத்து வரப்பட்டதாக விசாரணை மூலம் தெரிவிக்கப்பட்டுகின்றது.
இச்சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
(குகதர்சன்)
(குகதர்சன்)