Published On: Monday, May 06, 2013
வாழைச்சேனையில் கைக்குழந்தையுடன் கஞ்சா வைத்திருந்த பெண் கைது

வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலே இப்பெண் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 20,250 மில்லிக்கிராம் கஞ்சாவை கைப்பறியதாகவும் பொலிஸார் கூறினார்.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். சந்தேக நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(குகதர்சன்)