எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, October 15, 2014

கண்குளிர்ச்சிக்காக அழகான பெண்களை ரசிப்பேன்: ஞானசார தேரர்

Print Friendly and PDF

கேள்வி: உண்மையில் நீங்கள் யார்?  

பதில்: மிகவும் நல்லதொரு வினா. என்னைப்பற்றி இப்போது அதிகமாக கதைக்கப்பட்டாலும், நான் இந்த நிலைக்கு வருவதற்கான அடித்தளம் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர்தான் இடப்பட்டது. இன, மத, சமூக நடவடிக்கைகளில் நான் நீண்ட காலம் பிணைந் திருந்தேன். அது மிகவும் அமைதியாக செயற்பட்ட காலம். இது நாம் எழுந்து நிற்க வேண்டிய ஒரு யுகம் என நான் நினைக்கின்றேன். இன்று யாரு கதைத்தாலும், அங்கே நான் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளேன். இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. 


கேள்வி: நீங்கள் சிலகாலம் மௌனமாக இருந்தாலும் தற்பொழுது இந்த நாட்டில் மிக பிரபலமடைந்துள்ளீர்கள். இதுகுறித்து உங்களுடைய ஜாதகத்தில் கூறப்பட்டுள்ளதா?

பதில்: நான் சிறுவனாக இருக்கும்போது இவை குறித்து எனது ஜாதகத்தில் கூறியிருந்ததை வாசித்துள்ளேன். இருப்பினும், பரிநிர்வாணம் அடைவது குறித்து எங்கும் கூறப்பட்டிருக்கவில்லை. இராணுவத் தளபதி வரை செல்லமுடியும் என்றுதான் எனது ஜாதகத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இருப்பினும், இவை எல்லாம் ஏதோ ஒரு யுகத்தில் நடைபெறும் செயற்பாடுகளாக இருக்கலாம். பூர்வ ஜென்ம செயற்பாடு என்றும் இதனைக் கூறலாம். இது ஜீவிய காலத்தில் எந்தவொரு நேரத்திலாவது வெளிப் பட முடியும்.

கேள்வி: உங்களது இலட்சியம் அரசியல் வாதியா வதா? ஆன்மீகவாதியாவதா? 

பதில்: இவை இரண்டும்தான். நாம் யாரும் அரசி யலில் இருந்து விலகியிருக்க முடியாது. சகல மனிதர்களுக்கும் இது பொதுவானது. நாம் பிறக்கும்போதே ஏதாவது ஒர் அரசியல் கொள்கையுடன்தான் பிறக்கின் றோம். இருப்பினும் நாம் முன்னெடுப்பது வரலாற்று முக்கியத்துவம் மிக்க வேலைத்திட்டம் என்றே நம்புகின்றோம். நாட்டிலுள்ள அரசன் அநீதியானவனாக இருந்து, மக்கள் அவன் மீது வெறுப்புக் கெள்கின்றபோது, சிறந்த பிள்ளைகளை சாசனத்துக்காக அர்ப்பணித்து, விகாரை அமைத்தோம்.

குறித்த ஒரு வயதை அடையும்போது காவியுடையைக் களைந்துவிட்டு அந்த சிறந்த பிள்ளையை அரசனாக்கிய வரலாறு எமக்கு உள்ளது. நாமும் இந்த வரலாற்று சிறப்புமிக்க அரசியலைத்தான் செய்கின்றோம். இது இந்த யுகத்தில் எமக்கு சாட்டப்பட்டுள்ள ஒரு பொறுப்பாகும். நாம் அதற்கு ஏற்ப செயற்படுகின்றோம். இதற்கு அப்பால் எந்தவொரு செயற்பாட்டையும் நாம் முன்னெடுக்கவில்லை. 

கேள்வி: நீங்கள் தூய்மையான அரசியல்வாதியாக கூறிக்கொண்ட போதிலும், உங்களுக்கு பின்னால் கண்ணுக்குப் புலப்படாத அரசியல் ஆயுதம் ஒன்று இருக்கிறதாக கூறப்படுகின்றதே? 

பதில்: இந்த குற்றச்சாட்டை மிகவும் வெறுப்புடன் கண்டிக்கிறேன். ஏனெனில், இந்த நாட்டில் எந்தவொரு வேலையைச் செய்யப் போனாலும் கண்டனம் செய்வார்கள். நாம் உடுத்தாலும் தவறு. நின்றாலும் தவறு. இதுதான் மனிதர்களின் சுபாவம். இருப்பினும், பொதுபல சேனாவுடனும் எனது பின்னாலும் எம்மை இயக்குகின்ற எந்தவொரு அரசியல் ஆயுதமும் இல்லை என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன். புத்தபெருமானே எமது தலைவர். எத்தனையோ அமைப்புக்கள் அதன் தலைவரினதும், வேறு பலரினதும் தாளங்களுக்கு ஆடுவதைக் காண்கின் றோம். நாம் புத்தபெருமான் சென்ற பாதையிலேயே செல்கின்றோம். எமது தாளம் தர்மபோதனையாகும். நாம் அதற்கு ஏற்பவே ஆடுகின்றோம். 

கேள்வி: அப்படியென்றால், அரசாங்கத்தின் மூலம் பொதுபல சேனா இயக்கப்படுவதாக கூறப்படும் செய்தி பொய்யானதா? 

பதில்: நாம் சரியாக செயற்படும்போது இந்த நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் செயற்பட்ட விதத்தை நாம் கண்டோம். எம்மீது அரசாங்கமும், எதிர்க்கட்சியும் குற்றம் சாட்டுகின்றது. சிலர் நாம் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து செயற்படுவதாக கூறுகின்றனர். எமக்கு அரசாங்கத்தின் ஊடகங்களில் எப்போதாவது இடமளித்தி ருப்பதை நீங்கள் கண்டுள்ளீர்களா? சுருக்கமாக சொல்வதானால், எமது பின்னால் அரசாங்கமோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ இல்லை. 

கேள்வி: உங்களை நாம் ஊடகங்களில் ஆவேசத்துடன் பேசுகின்ற ஒருவராகவே காண்கின்றோம். ஏன் நீங்கள் உபதேசம் செய்வதில்லை? 

பதில்: நீங்கள் என்னுடைய டயரியை எடுத்துப் பார்த்தால், நான் ஒரு மாதத்துக்கு சுமார் 15 சன்மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருவதைக் கண்டு கொள் வீர்கள். சாதாரணமாக எனது தர்ம போதனைக்கு சுமார் 3 ஆயிரம் பேரளவில் மக்கள் கலந்துகொள்வார்கள். இலங்கையிலுள்ள பல வானொலி அலைவரிசைகளில் என்னுடைய போதனைகள்தான் அதிகம் ஒலிபரப்பப்படுகின்றன. ஆனால், என்னுடைய பெயரை அவர்கள் கூறுவதில்லை.

எனக்கு மேடையில் ஏறி பிரித் ஓதமுடியும். போதி பூஜை நடாத்தவும் முடியும். இருந்தும், இவை அனைத்தையும் மறந்துவிட்டுத்தான் நான் இந்த இனத்தின் பொறுப்பைத் தலையில் சுமந்து கொண்டேன். நான் இந்த வேலைத்திட்டத்தில் தொடர்புபடவில்லையென் றிருந்தால், இன்று நான் இந்நாட்டில் பிரபல உபதேசகராக இருந்திருப்பேன்.   

கேள்வி: ஆவேசப்படாமல் உங்களது செயற்திட் டத்தை முன்னெடுக்க உங்களுக்கு முடியுமல்லவா?

பதில்: நான் ஒரு ஆவேசக்காரன். சொல்லும் விட யம் உண்மையாக இருந்தாலும், சொல்லும் முறை தவறானதாகவே உள்ளது. இந்த தேரருக்குப் பேசத்தெரியாது என காரசாரமான விமர்சனங்கள் என்மீதுள்ளது. பிள்ளையொன்று தவறு விடும்போது, அவரது பெற்றோர் கள் முதலில் அவனை அன்பாக புத்திமதி சொல்வதைத்தான் செய்வார்கள். இரண்டாவது முறையும் அந்த தவறை விட்டால், அன்பு இருந்தாலும் கோபத்துடன் ஏசத்தான் செய்வார்கள். மூன்றாவது முறையும் அந்த தவறைச் செய்யும்போது அவனுக்குத் தண்டனை கொடுப்பார்கள். 

நாம் இந்த நாட்டின் தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் இந்த விடயங்களை (எதுவென்று கூறப்படவில்லை) மிக நன்றாகவே சொன்னோம். அமைதியான முறையில் எடுத்துக் கூறினோம். இதனைக் கேட்பவர்களாக அவர்கள் இருக்கவில்லை. இதனால், சிங்களவர்களுக்கு விளங்கும் பாஷையில் இந்த செய்தியுடன் தொடர்புகொள்ள என நாம் தீர்மானித்தோம். அது சரியாகவே அமைந்தது. எமக்கு அமைதிகாக்க வேண்டிய இடங்களில் அமைதியாக இருக்கவும் முடியும். தூண்டி விட வேண்டிய இடங்களில் தூண்டிவிடவும் முடியும். தேவையானால் இதற்கும் நாம் தயார். 

கேள்வி: உங்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தால் நீங்கள் தெரிவுசெய்வது பரிநிர்வாணத்தையா? ஜனாதிபதி பதவியையா?  

பதில்: பரிநிர்வாணம் என்பது தவத்தின் மூலம் பெறக்கூடிய ஒன்று. அதனை இலகுவாக எவரும் அடைந்து கொள்ள முடியாது. புத்தருக்கு உச்சகட்ட தவத்தின் மூலம்தான் பரிநிர்வாணம் அடைய முடிந்தது. இதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். பரிநிர்வாணம் அடைவது தான் என் இறுதி இலக்கு. இருப்பினும், எம்முடன் வாழும் சமூகம் துக்கம் அனுஷ்டிக்குமாயின், இந்த துக்கத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாத்தும் போதிசத்துவர் ஆகமுடியும் என்றால் அது எமது கடமை. இந்த மக்களின் துயர்துடைக்க ஜனாதிபதி பதவிதான் வேண்டும் என்பதில்லை.  

கேள்வி: சமய போதனைகள், சமய உபன்னியாசங்கள் இன்னும் இந்த சமூகத்துக்குப் பொருத்தமானதா?  

பதில்: இந்த சமூகம் அசுத்தமடைந்துள்ளது. மனிதர்களுக்கு உணவில்லை. குடும்பங்கள் சிதைவடைந்துள் ளன. அனாச்சாரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். கட்டுக்கடங்காது போயுள்ளது. எவ்வளது உபதேசம் புரிந்தோம்? கேட்பவர் யார்? பயன்பெறுவோர் யார்? பசியுடன் இருப்பவர்களுக்கு உபதேசம் பலனளிப்பதில்லை. நாம் முதலில் செய்ய வேண்டியது சமையலறையின் பிரச்சினையைத் தீர்ப்பதாகும்.

கேள்வி: சங்க வாழ்க்கையைத் தெரிவுசெய்த உங்களுடைய வாழ்வில் காதல் குறித்த அனுபவங்கள் இருக் கின்றனவா? 

பதில்: நிச்சயமாக. 12, 13 வயதிலிருந்தே இந்த காதல் தொடர்பு இருந்தது. இளைஞர் குணத்தில் பெண்களின் பின்னால் சென்றேன். அது மிகவும் அழகானது. நாம் கண்களால் பேசிக் கொண்டோம். அப்படியானதொரு கடந்தகால அனுபவம் எனக்கிருந்தது. ஒன்றிரண்டு வருடங்கள் இந்த அனுபவம் எனக்கிருந்தது. சங்க வாழ்க் கையைத் தொடங்கியவுடன் அவ்வளவும் நீரில் கரைந்து போனது. 

கேள்வி: அக்காலத்தில் காதலியொன்று இருந்தாளா? 

பதில்: அக்கால இலக்கிய சங்கத்தில் என்ன நடைபெற்றாலும் நான்பாட்டுப் பாடுவதில் வல்லவன். இதுபோன்ற செயற்பாடுகளினால் பெண்களின் ஆகர்சிப்பு என்மீதி ருந்தது. டொபி, சொக்லட் மற்றும் தேனீர் வாங்கித்தர வேண்டியளவு பெண்கள் இருந்தார்கள். குறித்த தொரு பெண் காதலியாக இருக்கவில்லை. 

கேள்வி: அழகான பெண் ஒருத்தியைக் கண்டால் எப்போதாவது உங்கள் மனம் சஞ்சலமடையவில்லையா? 

பதில்: அழகான ஒன்றைக் கண்டால் கண்குளிர்ச்சிக்காக ரசிப்பேன். இது மனித சுபாவம். இருப்பினும், காண்பதையெல்லாம் தலையில் தூக்கிக்கொண்டு திரிவதில்லை. அந்தக் காலத்திலும் அந்த அழகைக் கண்டேன். அழகான ஒருத்தி என்று நினைத்தேன். அது ஓர் உள்ளுணர்வு மாத்திரமே. 

கேள்வி: தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் மதுபானம், புகைத்தல் போன்ற பழக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளீர் களா? 

பதில்: ஒருபோதும் இல்லை.

கேள்வி: அரசாங்கத்துக்குள் நீங்கள் மிகவும் விரும்பும், வெறுக்கும் அரசியல்வாதி யார்? 

பதில்: எனக்கு மிகவும் பிடித்தமான அரசியல்வாதி பாட்டலி சம்பிக்க ரணவக்க. எனக்கு மிகவும் வெறுப் புக்குரியவர்கள் ராஜித சேனாரத்ன, வாசுதேவ, டிலான் பெரேரா போன்றோர். 

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியில் உங்களுக்குப் பிடித்தமான, பிடித்தமற்ற அரசியல்வாதிகள் யார்? 

பதில்: எனக்கு அப்படியானவர்கள் இல்லை. கருத்து ரீதியில் மட்டுமே பிரச்சினையுள்ளது.

கேள்வி: ஜே.வி.பி.யில் உங்களுக்குப் பிடித்தமான, பிடித்தமற்ற அரசியல் வாதிகள் யார்? 

பதில்: நான் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு விருப் பம். அக்கட்சியின் செயற்பாடுகளுக்கு விருப்பம். அதன் கொள்கையில்தான் பிரச்சினையுள்ளது. இது பௌத்த நாடு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களாயின் அப்போது அவர்களை நான் உயரத் தூக்கிப் பிடிப்பேன். 

கேள்வி: நீங்கள் மாமிசம் உண்பீர்களா? 

பதில்: ஆம். இப்போதென்றால் மிகவும் அரிது. 

கேள்வி: இப்போதுமா? 

பதில்: ஆம், அனைத்துமல்ல. மாமிசம் உண்டாலும், என்னிடம் இதுகுறித்து ஒரு நடுநிலையான போக்கே உள்ளது. 

கேள்வி: பௌத்த பிக்குகள் மாமிசம் உண்பது நல் லதா? 

பதில்: நாம் புத்தரின் உபதேசத்தையே ஏற்கின்றோம். தேவதத்தின் போதனைகளையல்ல. தேவதத்தின் முழு வாழ்க்கையிலும் மாமிசத்தைத் தவிர்ந்து கொள்ளுமாறு புத்தருக்கு உபதேசித்தார். இருப்பினும், அவர் அதனை புறக்கணித்தார். புத்தர் மஜ்ஜிம நிகாயவில் ஜீவக சூத்திரத்தில் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். சாப்பிட முடியுமான மாமிசம் என்ன? கூடாத மாமிசம் என்ன என்பது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கேள்வி: இலங்கைக்கு தேவையில்லை எனக் கருதும் அமைச்சர்களை நாடு கடத்துவதற்கு தங்களுக்கு ஒர் அவகாசம் கிடைக்கப் பெற்றால் நீங்கள் எந்த அமைச்சரை முதலில் நாடு கடத்துவீர்கள்?

பதில்: இந்த நாட்டிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கள் 225 பேரில் மூன்று நான்கு பேரைத் தவிர மற்ற எல்லோரையும் நாடு கடத்துவேன். தூரவுள்ள நாடொன்றுக்கே நாடு கடத்துவேன். சகல வசதிகளையும் அங்கே அவர்களுக்கு வழங்குவேன்.   

(நன்றி: மவ்பிம)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2