எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, August 05, 2015

வெற்றிலைக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் எமது சமூகத்திற்காக நாம் தோண்டும் கபுர்களாகும்” - சிப்லி பாறூக்

Print Friendly and PDF

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹமத்துல்லாஹி வபறகாத்துஹூ...

மட்டக்களப்பு மாவட்ட வாக்காளப் பொதுமக்களுக்கு!!!!

கண்ணியத்துக்குரிய உலமாக்களே மதிப்பிற்குரிய கல்வி மான்களே எனது அன்புக்குரிய தாய் மார;களே சகோதர சகோதரிகளே உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளால் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக உங்கள் அனைவரையும் என்னால் முடிந்த வரை ஒவ்வோரா வீடுகளாக விஜயம் செய்து உங்களது தனிப்பட்ட  பொதுப் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டேன். இருந்த போதிலும் இச் சிறிய மடலின் ஊடாகவும் உங்களை சந்திப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அல்-ஹம்துலில்லாஹ்!!!

உங்களுக்காக உங்களில் ஒருவனாகிய நான் கடந்து வந்த அரசியல் அனுபவங்களின் அடிப்படையில் எதிர்கால எமது சமூகத்தின் இருப்புக்காக சில உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...

எம்மை எதிர்நோக்கியுள்ள இந்த பொதுத் தேர்தலானது எமது மாவட்டத்துக்கு மட்டுமல்லாது இலங்கையில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களினதும் இருப்புக்கும் பாதுகாப்பிற்க்குமான மிகவும் சவாலான ஒரு தேர்தலாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அல்லாஹ்வின் உதவியால் நாம் அடைந்த வெற்றியானது இன்று நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எவ்வாறு உதவுகின்றதோ அதே போன்று எதிர்காலத்திலும் இனவாதிகளின் சவால்களுக்கு எதிராகவும் எமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ்வதற்க்காகவும் எமது பள்ளிவாயல்களில் சுதந்திரமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவும் இனவாத சூழ்ச்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவை முழு முஸ்லிம் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்ட நான் எனது சமூகத்திற்கு எதிரான இனவாதியான மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டேன். இதற்காக பல்வேறு பட்ட பணமும் ஆடம்பர வாழ்க்கையும் கொடுப்பதற்க்கு முன்வந்த சந்தர்ப்பத்தில் இவைகளை தூக்கி எறிந்து விட்டு எமது முஸ்லிம் உம்மத்திற்காக இனவாதத்திற்கெதிராக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களது அணியில் இருந்து வெளியேறினேன்.

இதைனை தொடர்ந்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் எனது பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு எனது வீட்டுக்கும் எனது ஆதரவாளர்களின் வீடுகளுக்கும் குண்டு வீச்சுத்தாக்குதல் நடாத்தப்பட்டது.

இவைகளையும் தாண்டி எமது சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.

எந்த சமூகத்தின் வாக்குகளைப் பெற்று அந்த சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்று கூறிய சகோதரர் ஹிஸ்புல்லா மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆகுவார் எனக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும் என்ற பேராசையின் காரணமாக தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டு மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இந்த மக்களை ஏமாற்றுவகற்காக ஒரு நாடகத்தினை அரங்கேற்றி கொண்டிருக்கின்றார்.

இதற்காக அதிகமான பணத்தையும் பொருள்களையும் செலவு செய்து எமது சமூகத்தின் வாக்குகளை சூரையாடி மீண்டும் ஒரு முறை இனவாதிகளுக்கு துணைபோகின்றார்.

இனவாதிகளின் காலடியில் எமது சமூகத்தினை அடகு வைக்கின்ற பணியினை மிகவும் மும்முரமாக செய்து கொண்டு போகிறார்.

அன்புக்குறிய ஈமானிய உள்ளங்களே…!

சிந்தியுங்கள். நான் மேற்குறிய விடயங்களை மிக ஆழமாக சிந்தித்து எமது சமூகத்தின் எதிர்கால இருப்புக்கும் இனவாதிகளின் முகவர்களாக செயற்படுகின்ற அரசியல் தலைமைத்துவங்களுக்கும் சரியான பாடம் ஒன்றை கற்பிக்கின்ற சந்தர்ப்பமாக எதிர் வரும் பொதுத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.

ஆகவே என்றும் கௌரவமாக யாருக்கும் சோரம் போகாத சமூக அக்கறை கெண்ட இளம் அரசியல் தலைமைத்துவங்களே…! சிந்தித்து செயலாற்றுங்கள்....!!! ஆக இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடையாளச் சின்னமான மரத்திற்கும் எனது இலக்கமான 5ம் இலக்கத்திற்கும் புள்ளடியிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

“வெற்றிலைக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் எமது சமூகத்திற்காக நாம் தோண்டும் கபுர்களாகும்”

நன்றி
“மக்களை மதித்து வாழும் மக்களின்
ஒருவனாக”
உங்கள் சமூக சேவகன்
பொறியியலாளர்
அல்-ஹாஜ். ஷிப்லி பாறூக்
SLMC வேட்பாளர். இலக்கம் - 05

(ஜுனனட்.எம்.பஹ்த்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2