எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, August 10, 2015

ஆசியாவின் அதிசயமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன் -சம்மந்துறையில் முதலமைச்சர்

Print Friendly and PDF

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாடு பல வருடங்களின் பின்னர் 09.08.2015 சம்மந்துறையில் தேசிய இளைஞர் அமைப்பாளரும் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றது.




இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் தேசியத்தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கெளரவ அதிதியாக கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உயர் பீட உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள்இ வேட்பாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இளைஞர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தும்போது

இன்று நாட்டில் நாம் தொழில் பெறுநர்களாக இருப்பதனை விட அதிகப்பேருக்கு தொழில் வழங்குநர்களாக மாறவேண்டும். எங்களால் எல்லாம் முடியும் என்ற தைரியமும் உற்சாகமும் ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் ஏற்பட வேண்டும்.

உதாரணமாக இந்த சம்மாந்துறை மண்ணில் இருந்து பயிற்ச்செய்யப்படும் வேளாண்மையின் அறுவடைசெய்யப்படும் நெல் பொலன்னறுவை போன்ற ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏன் அதனை சம்மாந்துறையில் இருந்து அரிசியாக ஏற்றுமதி செய்யமுடியாது.? ஏன் எங்களால் முடியாது என்ற கேள்வி எங்கள் அனைவர் மனங்களிலும் எழவேண்டும் அதனை நாம் செய்யக்கூடியவர்களாக தொழில் வழங்குனர்களாக நாம் மாறவேண்டும்.

கிழக்கில் உள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் கீழும் பல தொழிற்பேட்டைகளை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மூலம் வேலையற்ற இளஞர்கள்இ யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதன் மூலமும்இ நமது ஊர்களில் இருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் நமது குடும்ப பெண்கள்இ நம்சகோதரிகள்இ நமது உறவுக்காறப் பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதை விட்டு அவர்களை தங்கள் வீடுகளிலேயே இருந்து சிறந்த முறையில் கைத்தொழில்களை அல்லது அவர்களால் முடிந்த தொழில்களைச் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் நடவடிக்கையினை மாகாண சபை மூலம் செய்ய தீர்மாணித்துள்ளோம்.

எனவே இலங்கை நாட்டின் நாளைய வழிகாட்டியாக வரவிருக்கும் இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இங்கே கூடியிருக்கிறீர்கள். நல்லதொரு சமூகம் உருவாக வேண்டும் என்றால் இன்றைய ஒளைஞர்களின் வகிபாகம்  கட்டாயத் தேவையாக இருக்கிறது. இளைஞர்களின் ஆக்கம்இ ஊக்கம்இ இந்த நாட்டின் அபிவிருத்திக்கு கட்டாயத்தேவையாக இருக்கிறது. நாட்டையும் நம்மூரையும்இ நமது குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு வர இன்றைய இளைஞர்கள் நல்ல சிந்தனையுடன் தங்களின் வேலைப்பாடுகள்இ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒழுக்க முள்ள அறிவுள்ள ஒரு சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் அங்கே முக்கால் வாசிப்பங்கு இளைஞர்களின் தலையிலேயே சுமத்தப்படுகிறது. எனவே இளைஞர்களை நோக்கி அன்பான கட்டையிடுகிறேன். நாட்டில் நல்லதொரு சமுதாயமாக நம்மை நாம் வளர்த்துக்கொள்ள நல்ல நம்மைச்சூழவுள்ள அனைவருக்கும் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் முன்மாதிரியாக நமது நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தை ஆசியாவின் அதிசயமான ஒரு மாகாணமாக மாற்றிக்காட்டுவேன் என்னுடன் அனைவரும் கைகோர்க்க முன்வாருங்கள் அது கிழக்கின் விடியலை நோக்கிய பயணமாகவும் இலங்கை நாட்டின் அபிவிருத்திக்கு ஒளிர்வூட்டும் திட்டமாக வும் அமையும் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2