Published On: Tuesday, August 11, 2015
ஹம்பாந்தோட்டையில் லுநுகம்பெரவையில் - ரணில் விக்கிரம சிங்க
ஹம்பாந்தோட்டையில் லுநுகம்பெரவையில் அமைச்சா் சஜித் பிரமேதாசாவை ஆதரித்து (8) நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா ரணில் விக்கிரம சிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினாா் இங்கு உரையாற்றிய பிரதம மந்திரி-
மஹிந்த ராஜபக்ச கடந்த 10 வருடங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சி புரிந்துள்ளாா். பிரதமா் அமைச்சராக இருந்துள்ளாா். அவ்வாறானால் இந்த லுனுகம்வேர பிரதேசத்தில் ஆகக் குறைந்தது 150 -200 தொழிற்சாலைகளாவது உருவாகி இருக்க வேண்டும். இங்கு நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும். உங்களது வாழ்க்கைத் தரம் முன்னேறி இருக்க வேண்டும்.
ஆனால் அவா் தமது பிரதேசங்களையும் மக்களையும் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தாமல் அவா்களது ராஜபக்ச குடும்பங்கள் தான் பணம் பலம் படை எல்லாவற்றிலும் முன்னேறியிருக்கின்றாா்கள்.
ஆனால் மறைந்த ஜனாதிபதி ஜேஇஆர். ஜெயவா்த்ன அவா்களே இப் பிரதேசத்தில் காணிகளை இவழங்கி இம் மக்களை இங்கு குடியேற்றினாா். அன்று இருந்தவாறே இந்த மக்கள் இன்றும் உள்ளனா். அவா்களது வாழ்க்கையும் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லை்
இதற்கு முடிபுகட்டவே நாம் கடந்த ஜனவரி 8ஆம் திகதி நல்லாட்சியை ஏற்படுத்த மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கினோம். அதே போன்று தான் எதிா்வரும் 17ஆம் திகதி ஜ .தே.கட்சி அதிகாரத்திற்கும் வரும் அதற்கான வரத்தை நீங்கள் எங்களுக்கு தாருங்கள்.
நான் 60 மாததற்குள் இந்த நாட்டை சரிவரச் கொண்டு செல்வேன்
10 இலட்சம் தொழில்கள் வழங்க உரிய திட்டங்களைச் செயற்படுத்து வேன். இந்த கூட்டத்திற்கு கூடுதலான பெண்கள் வருகை தந்துள்ளீா்கள். அகேவே தான் பெண்களுக்கு குற்றசெயல்கள் வன்முறைகள் வற்புறுத்தல்கள் அதிகரிக்கின்றன.இதனைக் கவணிப்பதற்கே பொலிஸ் திணைக்களத்தில் ஒரு பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபா் நியமிகக்ப்படுவாா். பெண்களுக்கு நடக்கும் வன்முறைகள் கொடுமைகள் பற்றி விசாரிக்க தணியான ஒரு பொலிஸ் மற்றும் நீதி வசாரணைகளை ஏற்படுத்துவேன்.
எமது கட்சியின் சகல அரசியல் செயற்படுகள் மக்கள் பிரநிதிகளில் 25 வீதம் பெண்களுக்கு சா்ந்தப்பம் வழங்கப்படும். 26ஆயிரம் பொருளாதார நிலையங்கள் நாடுபூராவும் நிறுவப்படும்.
தொழில்பேட்டைகள் தொழிற்சாலைகள் நவீன தொழில்நுட்ப முறையில் கணனி தொழில்நுட்பத்துறைகளில் 10 இலட்சம் இளைஞா்கள் யுவதிகள் தொழில் வாயப்புக்கள் வழங்கப்படும்“
அமைச்சா் சஜித் பிரேமதாசா
ஹம்பாந்தோட்டையில் கடந்த 6 மதாத காலத்திற்குள் 1000 மக்கள் சந்திப்பை நான் நடாத்தியுள்ளேன். மீனவா்கள் கிரமாவாசிகள் சுயதொழிலாளா்கள் பொதுமக்கள் மதஇவழிபாட்டுத தலங்கள் தகம்பாடசலைகள் என பல்வேறு வகையினரைச் நாம் சந்தித்து அவா்களது பிரச்சினைகள் தீா்கப்பட்டுள்ளன.
குறைந்த வட்டியான 4 வீதத்தில் ஒவ்வொருவருக்கும் ்1 இலட்சம் ருபா கடன் வீதம் சுமா் 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதி்ா்காலத்தில் ஹம்பாந்தோட்டையில் வாழும் இளைஞா் யுவதிகள் 12000 பேருக்கு தொழிகள் வழங்க வேண்டியுள்ளது. அதற்கான திட்டங்களை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அவா்களின் வழிகாட்டலின் கீழ் அமுல்படுத்தப்படும். ஏற்கனவே 1 இலட்சம் ருபா வீதம் 2000 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைக் கொண்டு வீடற்ற குடும்பங்கள் தமக்கென்று ஒரு வீட்டை நிர்மாணிததுக் கொள்ள ஆரம்பித்துள்ளனா். வீடுகளில் இருந்து சுயதொழில் செய்வதற்காக 1 இலடசம்ருபா வீதம் 2000 பேருக்கு வழங்க்பபட்டுள்ளன.
எதிா்காலத்தில் இந்த நாட்டில் ஜ.தே.கட்சி ஆட்சியில் எமது தலைவா் ரணில் விக்கிரமசிங்க அவா்களின் ஆலோசனைக்கினங்க இந்த நாட்டில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற சமுா்த்தி பெரும் மக்களது வாழ்க்கை தரம் எழுச்சி பெரும் முழு இலங்கையிலும்
கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்கு பெற்ற ஒரு தலைவராக பிரதமா் ரணில் விளங்குவாா் என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.
அஸ்ரப் ஏ சமத்





