Published On: Thursday, August 13, 2015
முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிபெரும்போது முழு முஸ்லிம் சமூகமும் வெற்றிபெறுகிறது.
இந்த நாட்டில் வாழும் முஸ்லிங்கள் அரசியல்ரீதியாக வெற்றிபெற வேண்டும் என்றால் முதலில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிபெறவேண்டும். தனி மனிதர்களின் அடையாளங்களைக்கொண்ட அபேட்சகர்கள் வெற்றிபெற்றால் ஒரு சமூகத்தின் வெற்றியாக கொள்ளமுடியாது என கூறினார் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் அம்பாரைமாவட்ட தோர்தல் குழு உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர். முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டம் அன்மையில் பாலமுனையில் நடைபெற்றபோது அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் சட்டத்தரணி கபூர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அம்பாரை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் எமது கட்சியின் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் முறையே கல்முனை, நிந்தவூர், சம்மாந்துறை கிராமங்களைச் சேர்ந்தவர்களாயினும் மு.கா. வின் முகவர்களாகத்தான் களம் இறங்கியுள்ளார்கள். அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் வெற்றி இம்மாவட்டத்தின் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அடையாளத்தின் வெற்றியேயன்றி தனிப்பட்டவர்களின் சொந்த வெற்றியாகவோ, தனி ஊரின் வெற்றியாகவே கணிக்கமுடியாது என்ற உண்மையை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இம்மாவட்டத்தில் சில முக்கிய கிராமங்களை சேர்ந்தவர்கள் இத்தேர்தலில் எமது கட்சி சார்பில் நிறுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் பலர் மத்தில் நிலவுவதை நாம் நன்கு அறிவோம். அது ஒரு பிரதேசவாதத்தை தோற்றிவிக்கும் ஒரு குறுகிய அரசியல் நோக்காகத்தான் கொள்ளப்படும். எனவே இவைகளுக்கு அப்பால் பிரதேசவாதங்களைக் களைந்து எமது மறைந்த தலைவரின் கனவுகளை நிறைவேற்றும் அந்த பிரதேசவாத கோசங்களை உடைத்தெறிந்து நாம் எல்லோரும் எமது மரத்தின் நிழலின் கீழ் ஒன்றுபட வேண்டியது இக்காலத்தின் தேவையாகும்.
எமது கட்சியின் தேசிய தலைவர் மான்புமிகு அமைச்சர் றவூப் ஹக்கிம் அவர்கள் இன்நாட்டின் வாழும் முஸ்லிங்களின் குரலை சர்வதேச ரீதியிலும் ஓங்கி ஒலித்துக்கென்டிருக்கிறார். அவரின் கரத்தை பலப்படுத்துவதற்கு இம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு எமது கட்சிக்கு வாக்களித்து வெற்றிவாகை சூடுவதற்கு நாம் ஒவ்வொருவரும் உதவவேண்டும். இது எமது எல்லோரின் கடமையுமாகும் எனவும் வேண்டிக்கொண்டார்.
இக்கட்சியை மறைந்த தலைவருடன் இணைந்து பல கஸ்ட நஸ்டங்களுக்கு முகம்கொடுத்து ஏராளமான இழப்பீடுகளை நாம் இழந்து வந்துள்ளோம். இரத்தம் சிந்தி தியாகத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட இம் மரத்தை நாங்கள் பாதுகாப்பதற்கு எதிர்வரும் பொதுத்தோர்தலில் இன்ஸாஅல்லா ஐ.தே.கட்சிக்கு வாக்களித்து எமது மூன்று உறுப்பினர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
- பாலமுனைக் கூட்டத்தில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் -
