Published On: Saturday, August 01, 2015
சாய்ந்தமருது மு.காவின் கோட்டைதான் என மீண்டும் நிரூபித்துள்ள மக்கள் வெள்ளம்!!
சாய்ந்தமருதில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் கடற்கரை வீதியிலுள்ள
பௌசி ஞாபகார்த்த மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.
இதில் பெரும் திரளான கட்சியின் போராளிகளும் இளைஞர்களும் கலந்து கொண்டு பெரும் வரவேற்பினை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமுக்கு வழங்கினர்.
இதன் மூலம் சாய்ந்தமருது மு.காவின் கோட்டைதான் என மிகத் தெளிவான செய்தியினை அம்பாறை மாவட்ட மக்களுக்கும்இ ஏனைய கட்சிகளுக்கும் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை மு.கா தலைவர் வாக்குறுதியளித்தபடி தேர்தல் முடிந்தவுடன் வழங்கப்படும். இதில் சாய்ந்தமருது மக்கள் சலனமடையத் தேவையில்லை என மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இத்தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எமது கட்சியின் வேட்பாளர்கள் மூவருக்கும் வாக்களிக்க வேண்டும்.
இதன் மூலம் எமது மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இப்பிச்சார கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன் அலி கல்முனை மாநரக பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் கட்சியின் வேட்பாளர்களான பைசால் காசீம் எம்.ஐ.எம்.மன்சூர்; உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.பிர்தௌஸ் ஏ.நஸார்தீன் ஏ.ஏ.பசீர் மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(ஹாசிப் யாஸீன்)



