Published On: Thursday, August 13, 2015
ஜமால் முஹம்மது கல்லூரி கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு வரதட்சனை வாங்கமாட்டோம் மாணவர்கள் உறுதிமொழி
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் 31-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடை பெற்றது.
இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் செயல்பெற்று வருகிறது ஆனால் வரதட்சனை ஒழிப்புக்கு என்று எந்த அமைப்பு இல்லை ஆனால் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் மாணவர்கள் மூலம் வரதட்சனை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கைக்கூலி கைவிட்டோர் கழகம் கடந்த 31 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற அமைப்பு எந்த கல்லூரியிலும் கிடையது. இந்த மாணவர்கள் ஒவ்வொரு மஹல்லா ஜமாத்திற்கு வரதட்சனை வாங்குவது பெறும் குற்றம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடம் ;புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அந்த வகையில் 31-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா விடுதி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் முஹம்மது சாலிகு தலைமை வகித்து பேசினார். கழகத்தின் ஆலோசகர் முனைவர் எம். அப்துல் ஹக்கீம் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலாண்மை துறை இயக்குநர் முனைவர் அப்துல் சமது விடுதி இயக்குநர்கள் முனைவர் பி.என்.பி. முஹம்மது ஷகாபுதின் ஜமால் முஹம்மது யாசீன் ஜுபைர் விடுதி ஒருங்கினைப்பாளர் முனைவர் முஹம்மது ஷர்புதீன் மலேசியா கான் என்ற நசுருல்லாஹ்கான் விடுதி துணை காப்பாளார்கள் முனைவர் சையது அலி பாதுஷா முனைவர் ஜாஹிர் ஹுசைன் முனைவர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த ஆண்டு செயல்பாடுகள் குறித்து தலைவர் முஹம்மது முஸ்தாக் செயலாளர் அப்துல் ஆசிக் பொருளாளர் முத்துப்பேட்டை முஹம்மது அனிபா துணைத் தலைவர் புளியங்குடி அன்சாரி உதவும் இதயங்கள் செயலாளர் அஹமது ஜாவித் ஆகியோர் இந்த வருடம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க இருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார்கள்.
கைக்கூலி கைவிட்டோர் கழக நிறுவனர் என்.ஏ.எம் அப்துல் அலீம் 31-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கு பதவி ஏற்று வைத்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு சிற்ப்பு விருந்தினராக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் கோபிநாத் பேசுகையில் நான் பல்வேறு கல்லூரிக்கு பல நிகழ்ச்சிக்கு சென்றுள்ளேன் ஆனால் வர்தட்சனை ஒழிப்புக்கு என்று கைக்கூலி கைவிட்டோர் கழகம் இருப்பதயும் அவர்கள் செய்த வரும் பணிகள் நபி நாயகத்திற்கு பொருத்தமான பணியை இந்த மாணவர்கள் செய்து வருகிறார்கள். இவர்களுடைய பணிசிறக்க நானும் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
ஜமால் முஹம்மது கல்லூரி கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் 31-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கழகத்தின் நிறுவனர் என்.ஏ.அலீம் அறிமுகம் செய்து வைத்தார். கழகத்தின் தலைவராக நூர்தீன் செயலாளராக மொரீஸ் முஹம்மது அஸ்லம் பொருளாளராக அமீர் சுகைல் உதவும் கரங்கள் செயலாளரக ஜாபர் சாதிக் ராஜா துணைத் தலைவராக எம். காஜா நவாஸ் சமீல் குமார் இணைச் செயலாளராக முபாரக் அலி துணைப் பொருளாளரக வாஹித் அலி பிரதிபலிப்பு ஆசிரியர்களாக புரோஸ்கான் ஜாகிர் உசேன் அன்சார் அலி முஹம்மது சபீக் அஹமது சபியுல்லாஹ் மக்கள் தொடர்பு அலுவல்ர்களாக உபைதுல்லா அஹமது உவைஸ் திருநாகேஸ்வரன் அபூபக்கர் உள்பட பல்வேறு பொறுப்புக்கு மாணவர்கள் நியமணம் செய்யப்பட்டன.
இறுதியில் 31-ம் ஆண்டு புதிய தலைவர் எஸ்.நூர்தீன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்க்கு முன்னதாக மாணவர் அக்பர் கிரா அத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளை விடுதி துணை காப்பாளர் முனைவர் பிரசன்னா தொகுத்து வழங்கினார்.
(திருச்சி - சாகுல் ஹமீது)
(திருச்சி - சாகுல் ஹமீது)
