Published On: Tuesday, August 11, 2015
ஜமால் முஹம்மது கல்லூரியின் அரபு உயராய்வுத்துறை சார்பாக “ஆலிம் ஜமாலி பட்டமளிப்பு விழாவும் “இக்ரா பிஸ்மி ரப்பிக்க அரபிக் அசோஸியேசன்“ துவக்கவிழா
ஜமால் முஹம்மது கல்லூரியின் அரபு உயராய்வுத்துறை சார்பாக “ஆலிம் ஜமாலி திருச்சி” பட்டமளிப்புவிழாவும்“இ “இக்ரா பிஸ்மி ரப்பிக்க அரபிக் அசோஸியேசன்“” துவக்கவிழாவும்நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் காஜா நஜ்முத்தீன் அவர்கள் பட்டமளிப்பு விழாவை நடத்திவைத்தார்.ஆரம்பமாக பேரா. முஹையித்தீன்அப்துல்காதிர் அவர்கள் கிராஅத் ஓதினார். அரபுத்துறை தலைவர் பேரா. சையதுகயாஸ்அகமது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.கல்லூரியின் முதல்வர் முஹமதுசாலிஹ் தலைமை உரையாற்றினார்.
அதன் பின் பேரா. பஹாவுத்தீன் முஹம்மது நத்வி துணைவேந்தர் தாருல்-ஹுதா பல்கலைகழகம் கேரளா பட்டமளிப்புப்பேருரை ஆற்றினார். அதில் அரபு மொழியின் முக்கியத்துவத்தையும் பட்டம் பெரும் மாணவர்களின் பொறுப்புகளைபப்பற்றியும் குறிப்பிட்டார். இஸ்லாம் தீவிரவாதத்தை ஒரு காலும் அனுமதிப்பது கிடையாது. முஹம்மது நபி(ஸல்) அவர்களும் இறை வேதமான திருக்குர்ஆனும் குறிப்பான ஒரு சமுதாயத்திற்கு மட்டும் அருளப்பட்டதல்லஇ இது பொதுவாக உலக மக்களுக்கு உரிய ஒரு வேதமாகும். எவர்தான்பெற்ற அறிவைக் கொண்டு பயன் பெறவில்லையோ அவர் இறைவனின் கடும் வேதனைக்கு உரித்தானவர் என்று குறிப்பிட்டார். அதை தொடர்ந்து “ஆலிம் ஜமாலி திருச்சி” பட்டங்களையும் பரிசுகளையும் வழங்கினார்.பேரா பஹாவுத்தீன் முஹம்மது நத்வி அவர்களின் குர்ஆன் மலையாள மொழிபெயர்ப்பு கல்லூரி நூலகத்திற்கு அளிக்கப்பட்டது அதை கல்லூரி தாளாளர் காஜாநஜ்முத்தீன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.கல்லூரியின் தாளாளர் .காஜாநஜ்முத்தீன் ஆற்றிய வாழ்த்துரையில்இ ஈருலககல்வியும் பெறும் வகையில் இந்நிறுவனம் அமையவேண்டும் என்று தன் முன்னோர்கள் கண்ட கனவு இப்பொழுது நனவாகி கொண்டிருப்பதாகவும்இ அது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்டார்.
பிறகு “இக்ரா பிஸ்மி ரப்பிக்க அரபிக் அசோஸியேசன்“ துவக்க விழா நிகழ்வின் உரையைனு ஜாகிர்உசேன்பாகவி (இணை பேராசிரியர் அரபு உர்து பாரிசி துறை சென்னை பல்கலைகழம் சென்னை) ஆற்றினார். அவர் தன் உரையில் கல்வி கற்கும் மனிதனின் இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் வலிகள் உண்டு கல்வி கற்கும் போது பெறுகிற வலிகள் தான் ஒரு மனிதனை முழு மனிதனாக உருவாக்குகிறது. பட்டம் பெறும் மாணவர்கள் பட்டம் பெற்றதோடு கல்வி முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. இதுதான் கல்வி கற்றலின் ஆரம்பம். ஆகவே பட்டம் பெரும் மாணவர்கள் வாழ்க்கைப் பாதையில் சிறந்த முறையில் நற்குணங்களை தனதாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில்கல்லூரியின் துணை முதல்வர் கூடுதல் துணை முதல்வர் சேக்முஹம்மது துணை முதல்வர் பேரா.அப்துல் காதர் நிஹால் இயக்குனர் பேரா. அப்துல்ஸமத் இயக்குனர் நிர்வாகவியல் துறை இன்னும் பிற துறை சார்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். அரபுத்துறை பேராசிரியர் .அப்துல்காதர் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.
(திருச்சி - சாகுல் ஹமீது)
(திருச்சி - சாகுல் ஹமீது)