எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, October 21, 2015

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பனையோலை கைப்பணி பயிற்சி

Print Friendly and PDF

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக கிழக்கு மாகாணத்தில் பனையோலை கைப்பணி பயிற்சியை ஆரம்பித்துள்ளளோம் இதனை பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னனேற்றமடைய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி காணி, காணி அபிவிருத்தி, மனதவலு, மகளீர் விவகார அமைச்சர் டபிள்யூ.ஜீ.எம்.ஆரியவதி களபதி தெரிவித்துள்ளார்.





மட்டக்களப்பு மாவடிவேம்பில் பனையோலை கைப்பணி பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பளர் ரி.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்!

கிழக்கு மாகாணத்தில் பனையோலை கைப்பணி பயிற்சிக்காக நான்கு இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் சுவாமிநாதன் அவர்களுடன் இணைந்து மேலும் உதவிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

சரியான பயிற்சிகளைப் பெற்று உங்களது பனையோலைக் கைப்பணிப் பொருட்களை  உல்லாச பயணிகளை வருட இடங்களில் அவர்களை கவரும் வகையில் வீதியோரங்களில் சிறிய கடைகளை அமைத்து விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெறக் கூடியதாகவிருக்கும்.

மூன்று மாத கால பயிற்சிகளை முடித்து விட்டு வீடுகளில் கைபணி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் உங்களது சுயதொழிலை ஊக்குவிப்பதற்காக வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொடுக்க நாங்கள் நடவடிக்கை யெடுத்துள்ளோம்” என்றார்.

ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2