Published On: Wednesday, October 21, 2015
வாழைச்சேனை வட்டார வன காரியால அதிகாரிகளால் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டும் நபர்களை அதிகாரிக கைப்பற்றினர்
வாழைச்சேனை வட்டார வன காரியால அதிகாரிகளால் தமது வன வளப்பிரிவில் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டும் நபர்களையும் மாட்டு வண்டிலுடன் மரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன காரியலயத்தின் மேலதிக வன அதிகாரி எப்.எம்.ஷிபான் தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வடமுனைப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டுவதாக வாழைச்சேனை வட்டார வன காரியாலய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த காட்டுப்பகுதியை சுற்றி வளைத்த போது, சந்தேக நபர்கள் ஆறு பேரும் மரங்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் இயந்திர கைவால், சிறிய உழவு இயந்திரம் (லேன் மாஸ்டர்), மாட்டு வண்டிலுடன், 03 மாடுகளும் ஆறு முதுரை மரங்களும்இ 02 வெள்ளை கருங்காலி மரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் இவர்களில் மாட்டு வண்டியில் வந்த மூவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா வீதம் முப்பதாயிரம் ரூபாவும் சிறிய உழவு இயந்திரத்துடன் (லேன் மாஸ்டர்) கைதான மூன்று சந்தேக நபர்களுக்கும் தலா ஐயாயிரம் ரூபா வீதம் பதினையாயிரம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டதுடன், ஆறு பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன காரியலயத்தின் மேலதிக வன அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ந.குகதர்சன்இ
வாழைச்சேனை நிருபர்


