Published On: Thursday, December 24, 2015
பொதுமக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குவதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் செயலமர்வு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (23) புதன்கிழமை இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எச்.எம்.ஹை, இணைப்புச் செயலாளர்களான ஏ.ஜெலீல், எம்.எஸ்.எம்.மிஸ்பர், நௌபர் ஏ.பாவா, கே.ஏ.தௌபீக், மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ஏ.அன்ஸில், ஊடகச் செயலாளர் றியாத் ஏ.மஜீத், இணைப்பாளர் ஷாகிர் ஹ_சைன், முகாமைத்துவ உதவியாளர்களான எம்.நளீம், ஏ.ரவூப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் பொதுமக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குதல் மற்றும் உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்புகள் பற்றி பிரதி அமைச்சர் ஹரீனால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது பிரதி அமைச்சரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் பிரதி அமைச்சரின் சேவைகளை நாடிவரும் பொதுமக்களுக்கு கால தாமதமின்றி சிறந்த முறையில் சேவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் முன்னிலையில் உறுதியளித்தனர்.
(ஹாசிப் யாஸீன்)