Published On: Sunday, December 27, 2015
யஹியாகான் பௌண்டேசன் வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் மின்சார இணைப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவி வழங்கியது
நீண்ட காலமாக வறிய மற்றும் உதவியை எதிர்பார்ப்போருக்கு உதவி வரும் யஹியாகான் பௌண்டேசன் சமூக சேவை அமைப்பினால் வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் மற்றும் மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு 2015-12-26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பௌண்டேசனின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீட உறுப்பினரும் மற்றும் அம்பாறை மாவட்ட பொருளாளரும்மான, சமூக சேவையாளர் அல்ஹாஜ் யஹியாகான் தலைமையில் கல்முனை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இவ்நிகழ்வின் போது 25 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான கடிதங்களும் மற்றும் 05 குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டதுடன், சுயதொழில் முயற்சியாளர்கள் 05 பேருக்கு அவர்களுடைய தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்யும் முகமாக காசோலைகள் வழங்கப்பட்டது.
மேலும் இவ்நிகழ்வின் போது கடந்த முறை தரம் 05 புலமைப்பரீட்சை சித்தியடைந்த சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மாணவி செல்வி பாத்திமா சுஹாவுக்கு பணப்பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டார்.
இந்நிகழ்வில் யஹியாகான் பௌண்டேசன் சமூக சேவை அமைப்பின் உப தலைவரும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உப அதிபருமாகிய அஸ்மி காரியப்பர் மற்றும் அங்கத்தவர்கள் உட்பட ஆலோசகர்களான அல் ஜலால் வித்தியாலய அதிபர் நபார், அல்ஹிலால் வித்தியாலய பிரதிஅதிபர் மன்சூர் மற்றும் ஆசிரியர்களான இப்ராஹீம், மாகிர், புஹாரி , பைசால் மற்றும் உப தபால் அதிபர் முபாரக் மற்றும் இன்னும் பலர் கலந்துகொண்டார்கள்.




