Published On: Tuesday, December 22, 2015
அட்டன் நகரத்தில் கடை ஒன்றிலிருந்து கொள்வனவு செய்த சொக்லேட்டில் புழுக்கள் -மக்கள் அதிருப்தி
நோர்வூட் பிரதேசத்தில் 21.12.2015 அன்று நடைபெற்ற ஒளிவிழாவில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு வழங்கிய சொக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகளுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த அமைப்புக்குழு முறைபாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
அன்றைய தினம் நடைபெற்ற ஒளிவிழாவில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு வழங்குவதற்காக அட்டன் நகரப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் அதிகமாக சொக்லேட் கொள்வனவு செய்துள்ளார்கள். இந்த சொக்லேட்களை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொழுது இவ்வாறு புழுக்கள் இருந்ததை கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து இவர்கள் பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடை தொகுதியை சோதனை செய்யும் பொழுது குறித்த கடையில் இருந்த ஏனைய சொக்லேட்களையும் கைப்பற்றியதோடு மேற்படி சொக்லேட் கம்பனி நிர்வாகத்திற்கும், கடை உரிமையாளர்க்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)





