Published On: Tuesday, December 22, 2015
செய்திப் பணிப்பாளர்கள், பிரதம ஆசிரியர்களுக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ_க்கும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பணிப்பாளர்கள், பிரதம ஆசிரியர்களுக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்றிரவு (21) திங்கட்கிழமை பிரதி அமைச்சரின் ஏற்பாட்டில் கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில இலத்திரனியல், அச்சு ஊடக நிறுவனங்களின் செய்திப் பணிப்பாளர்கள், பிரதம மற்றும் உதவி ஆசிரியர்கள் ஆகியோருடன் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எச்.அப்துல் ஹை, இணைப்பபுச் செயலாளர்களான ஏ.ஜெலீல், நௌபர் ஏ.பாவா, எம்.எஸ்.எம்.மிஸ்பர், ஊடகச் செயலாளர் றியாத் ஏ.மஜீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சமூகம் சார்ந்த விடயங்களில் ஊடகங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கு பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்ததுடன் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் இராப்போசன நிகழ்வும் இடம்பெற்றது.
றியாத் ஏ.மஜீத்
ஊடகச் செயலாளர்,
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்