Published On: Thursday, December 17, 2015
தலைமைத்துவத்தை நோக்கி
மாந்தரினுள்ளம் இருளில் மூழ்கி
மாக்களின் உணர்வால் கொடுமைகள் செய்தே
பாபக் கடலில் நீந்திய வேளை
கறையகல் கதிரோன் உலகினில் உதித்தார்
இறையருள் புரிந்தான்
நம் நபி பிறந்தார்
ஏகனளித்த திருமறையதனை
எழுதும் கருவி ஏந்திடாமல்
உளமெனும் ஏட்டில் பதிவாய் வைத்தார்
அல்லாஹ் தந்த அருட் கொடை அண்ணல்
மாசறக் கல்வியைப் பெற்றிட வேண்டும்
பாசறை அதற்காய் அமைத்திட வேண்டும்
தேசங்கள் சென்றே கற்றிட வேண்டும்
நாசங்கள் வருவதை தடுத்திட வேண்டும்
உளமதில் ஓர்மை ஊன்றிட வேண்டும்
நலமதை எவர்க்கும் உணர்த்திட வேண்டும்
சாதனை புரிந்து போதனை செய்த
நம் இறசூல் வழி சென்றிட வேண்டும்
குணமதில் மேன்மை அடைந்திட வேண்டும்
தனங்களை நல்வழி செலவிட வேண்டும்
ஏழைகள் வேதனை அறிந்திட வேண்டும்
கோழையாய் வாழ்வதை தவிர்த்திட வேண்டும்
சினமதை தூர எறிந்திட வேண்டும்
உண்மையின் உருவாம் உத்தம நபியை
உயிராய் மதித்தே நடந்திட வேண்டும்
தீமைகள் உலகில் நீங்கிட வேண்டும்
நீதியும் நேர்மையும் நிலைத்திட வேண்டும்
வம்புகள் வாதங்கள் அழிந்திட வேண்டும்
தர்மங்கள் தோன்றி தழைத்திட வேண்டும்
நான் என்ற சுய நலம் ஒழிந்திட வேண்டும்
நாம் என்ற பொது நலம் ஓங்கிட வேண்டும்
அண்ணல் முஹம்மது அவனிக்கீந்த
விதி முறை வாழ்வு ஒளி பெற வேண்டும்
கவிதை ஆக்கம் :- பாத்திமா நஸீறா அலி
கல்முனை
மாக்களின் உணர்வால் கொடுமைகள் செய்தே
பாபக் கடலில் நீந்திய வேளை
கறையகல் கதிரோன் உலகினில் உதித்தார்
இறையருள் புரிந்தான்
நம் நபி பிறந்தார்
ஏகனளித்த திருமறையதனை
எழுதும் கருவி ஏந்திடாமல்
உளமெனும் ஏட்டில் பதிவாய் வைத்தார்
அல்லாஹ் தந்த அருட் கொடை அண்ணல்
மாசறக் கல்வியைப் பெற்றிட வேண்டும்
பாசறை அதற்காய் அமைத்திட வேண்டும்
தேசங்கள் சென்றே கற்றிட வேண்டும்
நாசங்கள் வருவதை தடுத்திட வேண்டும்
உளமதில் ஓர்மை ஊன்றிட வேண்டும்
நலமதை எவர்க்கும் உணர்த்திட வேண்டும்
சாதனை புரிந்து போதனை செய்த
நம் இறசூல் வழி சென்றிட வேண்டும்
குணமதில் மேன்மை அடைந்திட வேண்டும்
தனங்களை நல்வழி செலவிட வேண்டும்
ஏழைகள் வேதனை அறிந்திட வேண்டும்
கோழையாய் வாழ்வதை தவிர்த்திட வேண்டும்
சினமதை தூர எறிந்திட வேண்டும்
உண்மையின் உருவாம் உத்தம நபியை
உயிராய் மதித்தே நடந்திட வேண்டும்
தீமைகள் உலகில் நீங்கிட வேண்டும்
நீதியும் நேர்மையும் நிலைத்திட வேண்டும்
வம்புகள் வாதங்கள் அழிந்திட வேண்டும்
தர்மங்கள் தோன்றி தழைத்திட வேண்டும்
நான் என்ற சுய நலம் ஒழிந்திட வேண்டும்
நாம் என்ற பொது நலம் ஓங்கிட வேண்டும்
அண்ணல் முஹம்மது அவனிக்கீந்த
விதி முறை வாழ்வு ஒளி பெற வேண்டும்
கவிதை ஆக்கம் :- பாத்திமா நஸீறா அலி
கல்முனை