Published On: Wednesday, January 06, 2016
வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ 25,912 கோடி தேவை
தமிழக வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்பொழுது முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய குழுவிடம் பின்வருமாறு தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கன மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மத்திய குழுவினர் வெள்ளச் சேதங் களை மதிப்பீடு செய்வ தற்காக பல்வேறு மாவட் டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன் பிறகு டிசம்பர் முதல் வாரம் மீண்டும் எதிர் பாராத வகையில் பெய்த பெரு மழையால் சென்னை மாநகரப் பகுதி யில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. காஞ்சீ புரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி, திருநெல் வேலி ஆகிய மாவட்டங் களும் கடுமையாக பாதிக் கப்பட்டது.
எனது உத்தரவின் பேரில் மாநில அரசு போர்க் கால அடிப்படையில் பெரு மளவிலான மீட்பு பணி களையும், நிவாரணப் பணி களையும் உடனடியாக மேற் கொண்டது.
இந்த மழை வெள்ளத் தால் மக்களின் சொத்துக் களுக்கும், நகரின் உள் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.
பிரதமர் மோடி டிசம்பர் 3-ந்தேதி சென்னையில் வெள்ள சேதத்தை பார்வை யிட்டபோது நான் அவரிடம் வெள்ளச் சேதம் குறித்து விளக்கியதுடன் வெள்ள நிவாரணம் தொடர்பாக துணை அறிக்கை தயாரித்து அளிப்போம் என்று தெரி வித்தேன். அதன்படி கடந்த டிசம்பர் 22-ந்தேதி துணை அறிக்கையை நாங்கள் மத்திய அரசிடம் அளித்தோம்.
டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப் பால் ஏற்பட்ட சேதத்தை தற்காலிகமாக மற்றும் நிரந்த ரமாக சீரமைக்க 17,431.51 கோடி தேவை என கேட்டு இருந்தோம். ஏற்கனவே கேட்டு இருந்த நிவாரண தொகை ரூ.8,481 கோடியுடன் சேர்த்து மொத்தம் ரூ.25,912.45 கோடி நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு தேவைப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச்சேதத்தை பேரழிவு மற்றும் மிக கடுமையான சேதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது வெள்ளச் சேதங்களை பார்வையிட மீண்டும் அதே மத்திய குழுவினரை அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.வெள்ள நிவாரணம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதியை மாநிலத்துக்கு உரிய நேரத்தில் கிடைக்க செய்ய வேண்டும். தற்போது மத்திய குழுவினர் வெள்ளப்பாதிப்புகளை மிக ஆழமான முறையில் பார்வையிட்டு மதிப்பீடு செய்து தமிழகத்தில் ஏற்பட் டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச் சகத்திடம் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மத்திய குழுவிடம் கேட்டுக் கொண் டார்.
பெருமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பதை தமிழக அரசு முழுவீச்சில் தொடங்கியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு மத்திய குழு தனது பரிந்துரைகளை விரைவில் அளித்து மத்திய அரசு தேவையான நிதி உதவியை உடனடியாக அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதற்காக முதல்– அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, பழனியப்பன், உதயகுமார், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் பழனியப்பன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறை (பொறுப்பு) செயலாளர் விஜயகுமார், வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன், சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.