Published On: Saturday, January 16, 2016
தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் 32 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் கையளிப்பு
இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் 32 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 15.01.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் அவரினால் பசுமை பூமி எனும் காணி உறுதிப்பத்திரத்துடன் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் தலவாக்கலை ஒலிரூட் கீழ் பிரிவில் 32 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர்.சந்திரசேகரன் பெயரில் “சந்திரசேகரன் புரம்” என பெயர் சூட்டி காணி உறுதிப்பத்திரத்துடன் அமைச்சர் திகாம்பரம் 15.01.2016 அன்று கையளித்தார்.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)





