Published On: Tuesday, January 05, 2016
வட்டவளை வேன் விபத்தில் - 5 பேர் காயம்
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் வெளிஓயா பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து 05.01.2016 அன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் வெளிஓயா பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் மூவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் சிறுவர் ஒருவர் அடங்குவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)

