எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, January 01, 2016

வெதமுல்லை விபத்தில் இறந்த கர்ப்பிணி பெண்ணின் இறுதிச் சடங்கு

Print Friendly and PDF

கண்டி நுவரெலியா பிரதான பாதையின் வெதமுல்ல தோட்ட பகுதியில் லொரி ஒன்று கர்ப்பிணி  பெண் ஒருவர் மீது மோதியதால் ஸ்தலத்திலேயே மரணமான லபுக்கல்ல தோட்டம்  கீழ் பிரிவை சேர்ந்த பெருமாள் கோகிலாவின் இறுதி ஊர்வலம் (2015.12.31) அன்று நடைபெற்று மதியம் 1.00 மணியளவில் நல்லடக்கம் செய்யபடவுள்ளது.




பெரும் திறலான தோட்ட மக்கள் கோகிலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   கோகிலாவின் மறைவையொட்டி உறவினர்கள் உட்பட தோட்ட மக்கள் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்ந்துள்ளதுடன் தோட்டம் முழுவதும் சோகமயமாக காணப்படுகின்றது.

28.12.2015 இடம் பெற்ற மேற்படி விபத்தில் குறித்த கர்ப்பிணி பெண் ஸ்தலத்திலேயே மரணமானது குறிப்பிடத்தக்கது.   இதற்கு காரணமானவர் என சந்தேகிகப்படும் சாரதிஇ  கொத்மலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்து நாவலபிட்டிய நிதவான்  நீதிமன்றத்தில் 29.12.2015 ஆஜர் செய்யப்பட்டார்.

அங்கு விசாரித்த நீதிபதி 2016 ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை விழக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.   குறித்த கர்பிணி பெண்ணின் வயது 34 சந்திரகலா எனவும் அழைக்கப்படுவர்.   ஏற்கனவே 10 வயது சிறுவனின்  தாயுமாவார். 

இவரது சடலம் நாவலபிட்டிய வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் 2016.12.29 மாலை ஒப்படைக்கபட்டது.

இச்சம்பவம் இடம் பெற்றதும் லொரி உட்பட லொரியின் சாரதியை மக்கள் தாக்கினார்கள்.   இதனால் நுவரெலியா கண்டி பிரதான பாதையில் தடை ஏற்பட்டு பாரிய குழப்ப நிலையும் ஏற்பட்டது.

உரிய நேரத்திற்குள் கொத்மலை பொலிசார் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தற்போது லொறி உட்பட சராதியை தாக்கியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருவதாக தெரிய வருகின்றது.

(க.கிஷாந்தன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2