எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, January 06, 2016

குள்ளநரிகளின் தந்திரம் அமைச்சரிடமோ என்னிடமோ பலிக்காது : அன்வர் முஸ்தபா காட்டம்

Print Friendly and PDF

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் றஹீம்

எனதருமை உலமாக்களே, புத்திஜீவிகளே, சகோதர, சகோதரிகளே, தாய்மார்களே, பெரியார்களே, அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். 

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் மற்றும் இணையத்தளங்களிலும் நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரங்கட்டபட்டுள்ளதாகவும் திணைக்கள தலைமைத்துவ பதவி வழங்கப்படாமையினால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டதாகவும் சில செய்திகள் வந்து கொண்டிருப்பதை அவதானிக்ககூடியதாகவுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் இந்த ஊடக அறிக்கையினூடாக சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளேன்.

1.    எனது அரசியல் பயணமானது தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்கு பின் எமது பிரதேசத்தில் நிலவுகின்ற சாணக்கியமுள்ள ஊழலற்ற சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டும் மக்களின் நலன் கருதி அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

2.    கடந்த காலங்களில் எமது அரசியல் தலைமைத்துவங்களின் அசமந்த போக்கினால் நாம் பல துன்பங்களை சந்தித்த போது இவ் அரசியல் தலைமைத்துவங்களுக்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நான் மேற்கொண்டிருந்தமையை நீங்கள் மீட்டிப்பார்ப்பீர்கள் என நினைக்கின்றேன்இ ஈற்றில் எமது சமூகத்திற்கு எதிராக சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களையும் மகிந்த ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகவும் கடந்த சில வருடங்களாக பல தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வண்மையான எதிர்ப்பை தெரிவித்ததோடு எனக்கிருந்த சர்வதேச உறவைப்பயன்படுத்தி எமது சமூகத்தின் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தியமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் 

3.    எமது சமூகத்தின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு எனக்கு சொந்தமான சிம்ஸ் தனியார் உயர் கல்வி  நிறுவனத்தின் கிளையை எமது பிரதேசத்தில் நிறுவி 3000 மேற்பட்ட மாணவர்கள் இலவசமாக கல்வி கற்பதற்கும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தொழில்வாய்ப்பை பெற்று மிகவும் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

4.    இவ்வாறு சமுகம் சார்பான விடயங்களில் பல ஆண்டுகளாக இணைந்து செயற்பட்டபோது எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ றிசாத் பதியுதீன் அவர்களின் துணிச்சலானதும் சமுகம் சார்ந்ததுமான அரசியல் நடவடிக்கையில் இணைந்து செயற்பட சந்தர்ப்பம் கிடைத்தது.  கடந்த பல தசாப்தங்களாக கௌரவ றிசாத் பதியுதீன் அவர்களை அறிமுகமான போதிலும் கட்சியில் இணைந்த காலம் முதல் இன்றுவரை அவரின் நம்பிக்கைக்கும் மரியாதைக்குமுரியவனாகவே திகழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

5.    கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி 1200 வாக்கு வித்தியாசத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை இழந்த போதிலும் எமது கட்சி 33000 க்கும் அதிகமான வாக்குகளை பெற கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒரே ஒருவர் இரவு பகலாக கடந்த 2015 ஆண்டு ஆரம்பம் முதல் கட்சிக்காக அம்பாரை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் கட்சியின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளில்  செயற்பட்டதை  எமது தலைமைத்துவமோ அல்லது எங்கள் கட்சியின் ஆதரவாளர்களோ என்றும் மறக்கவில்லை.

6.    கடந்த தேர்தல் காலங்களில் ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்ற மறுநாள் என்னை சில மாற்றுக்கட்சி சகோதரர்கள் அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்தார்கள் அத்தோடு ஒரு ஊடக நண்பர் மூலமாக 50 மில்லியன் பணம் தருவதாகவும் என்னை அவர்களுடன் இணைந்து செயற்படுமாறும் கேட்டுக்கொன்டபோதிலும் நான் எனது கொள்கையையோ அல்லது தமைமைத்துவத்திற்கு அளித்த வாக்குறுதியையோ மீறாது செயற்பட்டமையை சில மாற்றுக்கட்சி சகோதரர்களும்  எனது அரசியல் பயணத்தில் இணைந்து செயற்பட்டவர்களும் அதே போன்று எங்களது தலைமைத்துவமும் என்றும் மறக்கவோ அல்லது என்மீது இவ்வாறான செய்திகள் வருகின்ற போது சந்தேகப்படவோ மாட்டாது என்பதை தெரிவிப்பதோடு ஆடு நனைகின்றபோது ஓநாய் அழுகின்ற கதை போன்று சில சகோதரர்கள் செயற்படுவதை இங்கு காணக்கூடியதாகவுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

7.    பதவிக்காக நான் கட்சி மாறியதாக இங்கு எழுதப்பட்டிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயமாகும்.  எங்களது தலைமை எனக்கு தகுந்த பதவிகளை கொடுப்பதாகவும் அதனூடாக எமது சமுகத்திற்கு சேவையாற்ற முடியும் எனவும் என்னிடமும் எனது ஆதாரவாளர்கள் மற்றும் இன்னும் பலரிடமும் வாக்குறுதி அளித்துள்ள இன்னிலையில் பதவி வழங்கப்படாமையினால் நான் கட்சி மாறுவதாக கூறுவது ஆச்சரியமூட்டும் வி;டயமாக காணப்படுகிறது.  தேர்தலின் பின்னர் கடந்த சில மாதங்களாக எனது கல்லூரியின் (CIMS CAMPUS ) விஸ்தரிப்பு பணிகளில் நான் சற்று வழமையை விட அதிகமாக ஈடுபடுவதினால் எனது அரசியல் நடவடிக்கைகளில் சற்று மந்தமாக காணப்படுகின்றதே தவிர தலைமைத்துவத்தினால் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என சில வங்குறோத்து அரசியல் செய்கின்ற நாகரிகமற்றவர்களின் செயற்பாடே தவிர என்னை எங்களது தலைமை ஒரு போதும் ஓரங்கட்டவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

8.    கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் ஒரு சிலர் என்னைப்பற்றி சிறு பிள்ளைத்தனமாக அறிக்கைகளை விட்டனர், இது அவர்களின் வங்குறோத்து அரசியல் நிலையை எடுத்துக்காட்டுவதோடு எனது அரசியல் நுழைவினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.  தயவு செய்து ஒருவரை புண்படுத்தும் வகையில் பொய்யான அறிக்கைகளை கொடுக்காதீர்கள்.  உங்களின் பொய்யான செய்திகளினால் எனது ஆதரவாளர்களோ அல்லது கட்சித்தலைமையோ பிழையாக என்னை நினைக்கப்போவதில்லை,  இருப்பினும் என்னுடன் மிகவும் கண்ணியமாக பழகின்ற சில மாற்றுக்கட்சி சகோதரர்கள் கூட சிலரின் தவறான விமர்சனங்களை பார்க்கின்ற போது கவலைப்பட்டார்கள். 

ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் சகோதர, சகோதரிகளே, பொய்யான வதந்திகளைப்பரப்பாதீர்கள் என வினயமாகக்கேட்டுக் கொள்கின்றேன்.

அன்வர். எம். முஸ்தபா  (M.Sc, MBCS, Dip in Diplomacy)                               இலங்கைக்கான நல்லிணக்க தூதுவர் - சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் -சிம்ஸ் தனியார் பல்கலைக்கழகம் , அகில இலங்கை  மக்கள் காங்கிரசின்இளைஞர் அமைப்பாளரும், சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும் 

ஹுதா உமர் 

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2