Published On: Sunday, January 10, 2016
கல்முனை அஸ் ஸம்ஸ் விளையாட்டு கழகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், புதிய நிர்வாக சபையினர் தெரிவும்
கல்முனை அஸ் ஸம்ஸ் விளையாட்டு கழகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், புதிய நிர்வாக சபையினர் தெரிவும் கடந்த வாரம் கழகத்தின் தலைவர் எல்.எம் சர்ஜூன் தலைமையில் கல்முனை இக்பால் சன சமூக நிலையத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய 2016 ம் ஆண்டின் கழகத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்களும் ஆலோசகர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அந்த வகையில் கழகத்தின் தலைவராக மீண்டும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.எம் சர்ஜூன் அவர்களும், பிரதி தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளர் எம்.வை இம்றான் அவர்களும், கழகத்தின் செயலாளராக ஏ.எச்.எம் சர்ஜூன் அவர்களும், உதவி செயலாளராக எ.ஆர்.அப்றான் அவர்களும், பொருளாராக எம்.எம் தில்சான், அவர்களும், அணித்தலைவராக யூ.எல்.எம் இர்சாத் அவர்களும் உப அணித்தலைவராக எஸ்.எம்.சஜீம் அவர்களும், மைதான ஒருங்கிணைப்பாளராக எம்.ரன்சான் அவர்களும், இனைப்பாளராக எ.எம் லுக்மான் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்தோடு கழகத்தின் ஆலோசகர்களாக ஆசிய பவுண்டேசன் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளரும், பிரபல ஆசிரியருமான றிசாட் சரீப் அவர்களும், சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான ஏ.பீ எம் அஸ்கர் அவர்களும், தொழிலதிபரும் பிரபல சமூக சேவையாளருமான தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பீ.ஜெளபர் அவர்களும், திவிநெகும வலய உதவி முகாமையாளரும் ஊடகவியலாளருமான ஐ.எல்.ஏ அஸீஸ் அவர்களும், மற்றும் கழகத்தின் முகாமைத்துவ நிர்வாக பணிப்பாளராக கல்முனை சாஹிரா கல்லூரியின் சிரேஸ்ட ஆசிரியரும் சமூக சேவையாளருமான வி.தையூப் அவர்களும், கழகத்தின் உயர் பீட நிர்வாக உறுப்பினர்களாக ரீ.எம். றிக்காஸ், எம் சஜான், யூ.எம் றியால், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் நியாஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இங்கு கழகத்திலிருந்து கல்வித்துறையிலும், விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்கும் வீரர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.அஷ்ரப்கான்)