Published On: Monday, January 04, 2016
கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.ஏ. ஹமீட் கல்முனை மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் அனுதாபச்செய்தியில் மனாப்
கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராக திகழ்ந்த ஐ.ஏ. ஹமீட் அவர்களின் இழப்பு நேர்மையான ஒரு அரசியல்வாதியின் இழப்பாகவும் அவர் கல்முனை மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் என்றும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளரும் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் செயலாளருமான எம்.ஐ.அப்துல் மனாப் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராகவும் புனர்வாழ்வு அதிகாரசபையின் முன்னாள் தலைவராகவும் இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் திகழ்ந்த ஐ.ஏ. ஹமீட் அவர்கள் அரசியல் மற்றும் பிரதேச இனவேறுபாடு ஏதுமின்றி செயற்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் பிரிவில் துயருறும் அனைவருக்கும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க பிராத்திப்பதாகவும் தனது அனுதாபச்செய்தியில் மனாப் தெரிவித்துள்ளார்.
-எம்.வை.அமீர்-
