Published On: Thursday, January 14, 2016
தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும். வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.
பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இந்தப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
தைப் பொங்கல் பண்டிகை 15.01.2016 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படயிருக்கின்றது.
அந்தவகையில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மலையகத்தில் 14.01.2016 அன்று வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.
இவர்கள் கொள்வனவு செய்யும் பூஜை பொருட்கள் புத்தாடைகள் போன்றவைகள் நகரில் நடைவியாபார வியாபாரிகள் ஊடாகவும் கடை தொகுதிகள் ஊடாகவும் பெற்றப்பட்டன.
மேலும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
(க.கிஷாந்தன்)





