Published On: Friday, March 18, 2016
தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டி- 2016
இலங்கையில் முதல் தடவையாக தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டி யொன்றை நடத்த இலங்கை அபிவிருத்தி ஊடக நிலையம் தீர்மானித்துள்ளது.
நோக்கம்
புரதான நிலை ஊடகங்களில் தமது குரலுக்கான உரிய இடமும் பிரதிநிதித்துவமும் கிடைக்காத மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை இரண்டு நிமிடத்தில் வீடியோ கதையாக சித்திரிக்கும் இளைஞர் யுவதிகளை அடயாளம் காண்பது இப்போட்டியின் நோக்கமாகும்.
சமூக ஊடகத்தில் அதிக அக்கறை காட்டிவரும் இளைஞர் யுவதிகள் மத்தியில் சமூக வீடியோ கதையாக்கத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் மற்றுமொரு நோக்கமாகும்.
(எம்.ரீ.எம்.பாாிஸ்)


