Published On: Friday, March 18, 2016
தேசிய மாநாட்டுக்கு நேரடி அழைப்பு விடுக்கும் களப்பணியில் மு.கா பிரதித் தலைவர்!
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு நாளை சனிக்கிழமை 19ம் திகதி பாலமுனையில் நடைபெறவுள்ளதையிட்டு கல்முனை பிரதேச வர்த்தக சமூகத்தினர், கட்சி ஆதரவாளர்கள், போராளிகள், நலன் விரும்பிகளை மு.கா பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேரடியாக சென்று அழைப்பு விடுக்கும் பணியில் நேற்று (17) வியாழக்கிழமை ஈடுபட்டார்.
இதில் பிரதித் தலைவருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர் தொண்டர் அணியினர், கட்சிப் போராளிகள் என பலரும் கலந்து கொண்டு வர்த்தக நிலையங்கள் தோறும் நேரடியாக சென்று அழைப்பு விடுத்தனர். இதன்போது வர்த்தக சமூகத்தினர் பிரதித் தலைவர் ஹரீஸினை இன்முகத்துடன் வரவேற்றனர்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டினை முன்னிட்டு கல்முனை தொகுதியின் மருதமுனை, கல்முனை, சாய்;ந்தமருது ஆகிய பிரதேசங்களின் பிரதான வீதிக்கு குறுக்காக கொடிகள் கட்டும் வேலைகள், மாநாட்டுக்கான கட்அவுட்கள்இ தோரணங்கள் அமைத்தல் என பல்வேறு வேலைகளை பிரதித் தலைவர் ஹரீஸினால் முடிக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் கல்முனை பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளது.
(ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்)