Published On: Tuesday, March 15, 2016
திருச்சி ஜமால் முகமது மகளிர் கல்லூரி விழா
திருச்சி ஜமால் முஹமது மகளிர் கல்லூரி ஆண்டு விழா வருகிற 24ம் தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மலேசியா நாட்டைச் சேர்ந்த டத்தோ தசுலிம் முஹம்மது இப்ராஹிம் பங்கேற்று மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரை வழங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாலிகு தெரிவித்துள்ளார்.
கண்ணியமிகு காயிதே மில்லத் மற்றும் காஜாமியான் ராவுத்தர் ஜமால் முஹமது ஆகியோர் முஸ்லிம் சமுதாய மக்கள் படிப்பதற்காக தென்னகத்திலே முதன் முதலாக 1951ஆம் ஆண்டு மஜ்லிஸ் உலமா அரபி சாலை ஆரம்பிக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கு மார்க்க கல்வியை புகட்டினார்கள். பின்னர் பல்வேறு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க உலக கல்வியும், மார்க்க கல்வியும் கற்பிக்க கூடிய ஜமால் முகமது கலை அறிவியல் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு, அனைத்து சமூதாய மக்களும் பயன்படக்கூடிய அளவில் இன்று முதல் திகழ்ந்து வருகிறது.இந்த கல்லூரி சிறுபாண்மையினர் அடிப்படையில் அரசு உதவி பெரும் கல்லூரியாக்க தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 2004ம் ஆண்டு தன்னாட்சி கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் அனைத்து வசதிகளும் கட்டமைப்பு கூடிய அங்கமாக இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. பின்னர் 2009ம் ஆண்டு பல்கலைக்கழக மானிய குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு அதை தர மேம்பாட்டு குழுவினர் ஆய்வு செய்து (நாக் கமிட்டி) 3.6 கிரேடு வழங்கப்பட்டது. 2011ம் ஆண்டு ஆற்றல் வள தனித்தகுதி பெற்ற கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டது.
6ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தர மேம்பாட்டு குழுவினர் இக்கல்லூரிக்கு வருகை தர உள்ளனர். இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் முஹமது சாலிகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ஜமால் முகமது கல்லூரிக்கு 3வது முறையாக தேசிய தர மதிப்பீடு செய்வதற்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்தோம் எங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தர மதிப்பீட்டுக் குழுவால் 3தேசிய தர மதிப்பீட்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய தர மதிப்பீட்டு அமைப்பால் நியமனம் செய்யப்பட்ட ஒடிஷாவிலுள்ல கே.ஐ.ஐ.டி பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.டி மாத்துர், ஹரியானா இந்திய ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி பேராசிரியர் புஹி, மும்பைஎஸ்.வி.டி கல்லூரி முதல்வர் முனைவர் ஜக்மீட் மதன், ஆகியோர் மதிப்பீடு செய்ய வருகிற 17, 18, 19 ஆகிய தேதிகளில் கல்லூரிகளில் உள்ள கல்வித் தரம், உள் கட்டமைப்பு, கற்றல் திறன், மாணவர்கள் மேம்பாடு திறன், சிறந்த ஆய்வு, சிறந்த முயற்சி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உள்ளார்கள்.
அதன் பின் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கும் ஆய்வுக் குழுவினர் வருகிற 21, 22 ஆகிய இரு தினங்களில் கல்லூரிக்கு வருகை தந்து பல்வேறு கல்லூரிகள் தரம் பற்றியும், கட்டமைப்பு பற்றியும் மாணவர்களின் திறனை பற்றியும் ஆய்வு செய்து இக்கல்லூரிக்கான தன்னாட்சி அமைப்பை நீடிப்பு வழங்க உள்ளார்கள்.இக்கல்லூரியில் ராகிங் கொடுமைகள் கிடையாது. இக்கல்லூரியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வி உதவி தொகைகள் முன்னால் மாணவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 1000 மாணவர்களுக்கு ஐம்பது லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை முழுக்க முழுக்க இங்கு படித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கல்லூரி மூலமாக வருடந்தோறும் வேலைவாய்ப்புகள் நடத்தப்பட்டு அதில் அதிக அளவில் எங்கள் கல்லூரி சார்ந்த மாணவ, மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வருகிற 23ம் தேதி ஜமால் முகமது கல்லூரி ஆண்டு விழா நடைபெறுகிறது.
ஜமால் முகமது கல்லூரி பெண்களுக்கென்று தனிப்பிரிவாக தொடங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் திறமைகளை வளர்த்து கொள்வற்காக பல்வேறு திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது. பெண்களுக்கென பல்கலைக்கழக மாணிய குழு மூலமாக அனைத்து வசதிகளும் கொண்ட விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. 24ம் தேதி ஜமால் முகமது மகளிர் கல்லூரி ஆண்டு விழா நடைபெறுகிறது. எங்கள் கல்லூரியில் பயின்றவரும் மலேசியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் வழி பள்ளிகளை தத்தெடுத்து, அவர்களுக்க்கு தேவையன படிப்பு செலவுகளை அனைத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார் அதே போன்று மலேசியாவில் ஜமால் முகமது முன்னால் மாணவர் சங்கத்தை ஏற்படுத்தியவர் எங்கள் கல்லூரிக்கும் அதிக அளவில் மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்தவர் தான் எங்கள் கல்லூரி ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மலேசியா நாட்டைச்சேர்ந்த டத்தோ தசுலிம் முகமது இப்ராஹீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.. இவ்வாறு கூறினார்.பேட்டியின் போது கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் முனைவர் காஜா நஜ்முதீன், உதவி செயலாளர் ஜமால் முகமது துணை முதல்வர்கள் முனைவர் முகமது இப்ராஹீம், முனைவர் இஸ்மாயில் மைதீன் மற்றும் பேராசிரியர் உடன் இருந்தனர்.
