Published On: Sunday, April 24, 2016
இந்தியாவின் நீர் ஆதாரத்தில் கங்கை நதியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கங்கை நதியை சுத்தப்படுத்துவதில் அனைவரும் ஈடுபட வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வானொலி உரை
பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் இன்று உரையாற்றினார். பிரதமர் தமது உரையில் இந்தியாவின் நீர் ஆதாரத்தில் கங்கை நதியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கங்கை நதியை சுத்தப்படுத்துவது குறித்து 30 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. கங்கை நதியை சுத்தப்படுத்துவதில் அனைவரும் ஈடுபட வேண்டும். இதில் அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. சுத்தமான குடிநீர் காரணமாக நல்ல உடல் நலம் கிடைக்கும். பொருளாதாரம் வலுப்பெறும். வறட்சி கவலையளிக்க செய்கிறது.
இந்த காலகட்டத்தில், நீரை சேமிப்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. மழை நீரை சேமிக்கவும், பாதுகாக்கவும் பிரசாரம் செய்ய வேண்டும். குடிநீரை சேமிக்கவும், சிக்கனமாக பயன்படுத்தவும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
மேலும் இந்த ஆண்டு பருவநிலை நன்றாக இருக்கும் என்ற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். இதையடுத்து மும்பையை சேர்ந்த மாணவி ஷர்மிலா எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார். அப்போது மாணவர்களின் கவனம் கற்றலில் மட்டுமே இருக்க வேண்டும்.இது பள்ளியில் இருந்து கல்லூரிக்கு மாறும் தருணம். உ.பி மாணவியின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது இளைஞர்கள் விளையாட்டு மற்றும் அனைத்து துறைகளிலும் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.மேலும் சமையல் எரிவாயு மானியத்தை ஏழைகளுக்காக தியாகம் செய்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் நல்ல செய்தி வருகிறது. ரவி என்பவர் தனக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறினார்.
